தாமதம் : எப்பொழுதும் அலுவலகத்திற்கு தாமதமாக வருபவர்களை யாரும் விரும்புவதில்லை.தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றும் சக பணியாளர்கள் மற்றும் மேனேஜருக்கும் பிரச்சனைகளை உருவாக்கலாம். குறிப்பிட்ட ஊழியரின் இந்த பழக்கம் மீட்டிங்ஸ் மற்றும் ஒர்க் ஷெட்யூலை சீர்குலைக்கும் மற்றும் மற்றவர்களின் நேரத்தை மதிக்காத ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது
மோசமான கம்யூனிகேஷன் : திறமையாகவும், தெளிவாகவும் பிறரை தொடர்பு கொள்ள போராடுபவர்கள், பிறர் மத்தியில் நிறைய தவறான புரிதலை ஏற்படுத்தலாம். அவர்கள் வசம் ஒப்படைக்கும் ப்ராஜக்ட்ஸ்களில் பிழைகள் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். ஒருவரின் மோசமான தகவல்தொடர்பு திறன் அலுவலகத்தில் டீம் மெம்பர்ஸ் மத்தியில் மோதல் ஏற்பட வழிவகுக்கும்.
பொறுப்பு ஏற்பதில் தயக்கம் : ஊழியர்கள் தாங்கள் செய்த செயல்களுக்கு எப்போதும் பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் தாங்கள் செய்த செயல்கள் அல்லது தவறுகளுக்கு பொறுப்பேற்க தயக்கம் கொள்பவர்கள் அல்லது மறுப்பவர்கள் முழு குழுவிற்கும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். இது அலுவலகத்தில் எதிர்மறை பணிச்சூழலை உருவாக்கும்.
கிசுகிசு பேசுவது : அலுவலகத்தில் மற்றவர்களை பற்றி எப்போதும் கிசுகிசு பேசும் ஊழியர்கள் ஒரு டாக்சிக் ஒர்க் என்விரான்மென்டை உருவாக்குகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்கள் பிற ஊழியர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவுகளை சேதப்படுத்துவர் மற்றும் இவர்களின் இந்த பழக்கம் உற்பத்தித்திறனை எதிர்மறையாக பாதிக்கலாம். யாரை பற்றியாவது கிசுகிசு பேசிகொண்டே இருக்கும் நபரை யாரும் விரும்பவும் மாட்டார்கள்.
பூஜ்ஜிய நிறுவன திறன்கள் : எனர்ஜி மற்றும் ஒர்க்ஸ்பேஸை நன்கு நிர்வகிப்பதோடு, ஒதுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிக்க organisational skills அவசியம். பொதுவான organisational skil என்று பார்த்தால் பணியிடத்தை ஒழுங்காக பராமரித்தல், காலக்கெடுவிற்குள் வேலைகளை முடிப்பது மற்றும் டீமுடன் நன்றாக தொடர்பு கொள்வது உள்ளிட்டவை அடங்கும். ஆனால் ஆர்கனைசேஷன் மற்றும் டைம் மேனேஜ்மென்ட்டுடன் போராடும் ஊழியர்கள் தங்களுக்கும் தங்கள் சக ஊழியர்களுக்கும் பிரச்சனைகளை உருவாக்கலாம். அவர்களிடம் மிஸ்ஸாகும் நிறுவன திறன்கள் வேலையில் குறைந்த தரம், உயரதிகாரிகளுக்கு ஏமாற்றம் உள்ளிட்ட பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
மோசமான சுகாதாரம் : மோசமான சுகாதார பழக்கவழக்கங்களைக் கொண்ட ஊழியர்களுடன் பழக யாரும் விரும்புவதில்லை. தொடர்ந்து குளிக்காமல் பணிக்கு வருபவர்கள் அல்லது கை சுகாதாரம் பேணாதவர்கள் தங்கள் சக பணியாளர்களுக்கு சங்கடமான பணிச்சூழலை உருவாக்கலாம். இது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவலைகளை ஊழியர்கள் மத்தியில் எழுப்பலாம்.
வளைந்து கொடுக்காத தன்மை : மாற்றங்களுக்கு ஏற்ப அல்லது புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்பாத பணியாளர்கள் மற்ற குழு உறுப்பினர்களின் முன்னேற்றத்தை கடினமாக்கலாம். மேலும் ஒரு ஊழியரிடம் இருக்கும் இந்த பழக்கம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனையும் தடுக்கிறது. முன்னேற முயற்சிக்கும் பிற டீம் மெம்பர்ஸ்களிடையே கோபத்தை உருவாக்கலாம்.