ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சென்று நீண்ட நேரத்திற்கு பின் வீடு திரும்பும் உங்கள் குழந்தை பசியோடும்,சோர்வோடும் வருகின்றனர். அவர்களை சந்தோஷப்படுத்த நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் தான் இந்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ். தற்போது சுவையான ஸ்னாக்ஸ் என்பது பெற்றோrகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. அதே பழைய உணவுகளை பார்க்கும் குழந்தைகள் உடல் சோர்வுடன் மன சோர்வும் அடைகின்றனர்.
வருத்தப்பட தேவையில்லை, இதற்கு தீர்வாகவும், சில நிமிடங்களிலும் சுவையான தின்பண்டங்கள் நீங்கள் உடனடியாக தயாரித்து, உங்கள் குழந்தைகளை சந்தோஷப்படுத்தவும், ஒரு ஆரோக்கியமான சமையல் குறிப்புக்களை நாம் தற்போது காணலாம். மேலும், இந்த உணவு வகைகள் சுவையாக இருப்பதோடு, சத்தான பல வகை பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும்.
போஹா கட்லெட் : உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும், அதனுடன் கழுவிய போஹா மற்றும் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, துருவிய இஞ்சி, ஜீரா மற்றும் உப்பு சேர்த்து மசிக்கவும்.பின் இந்த கலவையை கட்லெட் வடிவில் வடிவமைத்து, இந்த கட்லெட் ஒவ்வொன்றையும் ப்ரட் தூள் மீது உருட்ட வேண்டும். சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை புதினா சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
வாழைப்பழ மில்க் ஷேக் : ஒரு அத்திப்பழம், இரண்டு அக்ரூட் பருப்புகள், நான்கு பாதாம் பருப்புகள் இவை அனைத்தையும் நீரில் ஊற வைக்கவேண்டும். ஒரு blender ல் இந்த ஊறவைத்த உலர் பழங்களை சேர்த்து, இத்துடன் ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் சிறுது நறுக்கிய nuts தூவவும்,மில்க் ஷேக் ரெடி.
ஆரிகனோ பனீர் : ஒரு லிட்டர் பாலை காய்ச்சி,அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஆரிகனோ பனீர் தயாரிக்கவும். ரெடியானதும், பனீரை சிறிய க்யூப்களாக கட் செய்யவும். ஒரு கடாயை எடுத்து சிறிது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு, ஆர்கனோ பனீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.ரெடியான இந்த ஆர்கனோ பனீரை சூடான தோசையுடன் பரிமாறவும்.
வாழைப்பழ சாக்லேட் ரோல் : வாழைப்பழங்களை 2-3 துண்டுகளாக நறுக்கி அந்த வாழைப்பழ துண்டுகளை உருகிய டார்க் சாக்லேட்டில் நனைக்க வேண்டும். பின் ஒரு தட்டில் பட்டர் பேப்பரை வைத்து, அதன் மேல் இந்த வாழைப்பழ துண்டுகளை வைத்து அதன் மேல், சிறிது வறுத்த வேர்க்கடலையைத் தூவி சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்து, குளிர்ந்தவுடன் வெளியே எடுக்கவும். குழந்தைகள் அதிகமாக விரும்பும் ஒரு ஈவ்னிங் ஸ்னாக் ரெடி
ரொட்டி பீஸ்ஸா : ஒரு ரொட்டியை எடுத்து கொண்டு அதன் மீது கெட்ச்அப் சேர்க்கவும்,பின் அதன் மேல் வதக்கிய வெங்காயம் மற்றும் கேப்சிகம் காய்கறிகளைச் சேர்க்கவும். மேலும் அதன் மீது துருவிய சீஸ் சேர்த்து, ஒரு சூடான தவாவில் வைத்து, சீஸ் உருகும் வரை மூடியால் மூடி குக் செய்யவும், இதோ ரெடியாகிவிட்டது. இதை பீட்சா போன்று சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். உங்கள் ரொட்டி பீஸ்ஸா தயாராகிவிட்டது.
மாம்பழ ஜூஸ் : இரண்டு கப் நறுக்கிய மாம்பழத்தை எடுத்து, ஒரு பிளெண்டரில் சேர்க்கவும்.அதில் இரண்டு கப் குளிர்ச்சியான பால் மற்றும் சிறிது சர்க்கரை அல்லது ரோஸ் சிரப் சேர்க்கவும்.மேலும் நம் தேவைக்கேற்ப ஐஸ் க்யூப்களைச் சேர்த்து, பிளெண்டரில் அரைக்கவும்.சுவையான ஜூஸ் ரெடி. இதை அழகான கண்ணாடி கப்- ல் ஊற்றவும்.
சீஸ் தோசை : தோசை மாவை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி,ஒரு கரண்டி நிறைய மாவை அந்த கடாயில் சேர்த்து வட்ட வடிவில் பரப்பவும். இந்த தோசையின் மேலே,பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் தூவி சிறிது கெட்ச்அப் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து, காய்கறிகள் வேகும் வரை ஒரு மூடியால் மூடி வைக்கவும்.சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து,அந்த தோசையின் மேல் துருவிய சீஸ் சேர்த்து, சீஸ் உருகியதும், கடாயில் உள்ள தோசையை எடுத்து சூடாக பரிமாறுங்கள்.