முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

புதிய பணியிடத்தில் சேரும் போது கண்டிப்பாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் உண்டு. அவை குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.

 • 16

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பொருத்த வரையிலும் நம்முடைய வளர்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பல காரணங்களுக்காக வேறு நிறுவனத்திற்கு நாம் மாற வேண்டியிருக்கும். புதிய அலுவலகத்தின் பணிச்சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்ளக் கொஞ்சம் நேரம் எடுக்கும். இதனைத் தாண்டி புதிய நிறுவனம் என்பதால் நமக்குள் ஒருவித புத்துணர்ச்சி அதிகரிக்கும். இதற்கிடையே புதிய நிறுவனத்தில் நாம் வேலைக்குச் சேரும்போது, அங்கு தவறாமல் சில காரியங்களை நாம் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  சரியான டிடிஎஸ் : புதிய நிறுவனத்தில் உங்களுக்குப் பொருத்தமான டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்தில் எவ்வளவு ஊதியம் கிடைத்தது, அங்கு என்னென்ன பிடித்தங்கள் செய்யப்பட்டன, எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டது என்ற தகவல்களை புதிய நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே உங்களுக்கான பிடித்தங்களை முறைப்படி செய்ய இயலும்.

  MORE
  GALLERIES

 • 36

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  படிவம் 16 : வேலையை மாற்றும்போது முந்தைய நிறுவனத்திலும், தற்போதைய நிறுவனத்திலும் படிவம் 16 பெற வேண்டும். சரியான வகையில் வருமான வரிக்கைக்குத் தாக்கல் செய்ய இது உதவியாக அமையும். அதிலும் நிறுவனத்தை மாற்றுகின்ற நபர்கள் சரியான தருணத்தில் வருமான வரிக்கைக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அது தவிர நீங்கள் எந்தெந்த சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்கள் என்பதை இரண்டு நிறுவனத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வருமான வரித்துறையிடம் அவர்கள் தகவலைப் பகிர்ந்து கொள்வார்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் : காப்பீடு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் என அனைவருக்குமான ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் வேலைக்குச் சேரும் முன்பாகவே இந்த தகவலை நீங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

  MORE
  GALLERIES

 • 56

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  பிபிஎஃப் திட்டங்கள் : ஒரு நிறுவனத்தில் வேலையை விட்டு விலகும்போது ஈபிஎஃப் பணத்தைத் திரும்பப் பெறக் கூடாது. ஏனெனில் உங்கள் ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பு தொகையை இது குறைத்துவிடும். ஏற்கனவே உள்ள ஈபிஎஃப் கணக்கு எண் மற்றும் யுஏஎன் கணக்கு எண்களை புதிய நிறுவனத்திடம் சமர்ப்பிக்கத் தவறாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  கடன்களை முன்கூட்டியே அடைக்கலாம் : ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட புதிய நிறுவனத்தில் அதிக ஊதியம் கிடைக்கும். அதை வீணடித்துவிடாமல் உங்கள் சேமிப்புகளை அதிகரிக்கலாம். ஒருவேளை வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவை இருக்கும் பட்சத்தில் அவற்றை முன்கூட்டியே முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES