ஒரு தலைவன் என்பவன் எல்லோருக்கும் முன்னுதாரணமானாக இருக்க வேண்டும். தனக்கு கீழ் உள்ள அனைவரையும் வழிநடத்திச் செல்பவராக இருக்க வேண்டும். ஒரு இலக்கை அடைவதில் தலைவன் காட்டும் வேகம், முயற்சி, நம்பிக்கை ஆகியவற்றை பார்த்து தான் கீழே உள்ளவர்கள் உந்து சக்தியோடு உழைக்கத் தொடங்குவார்கள். தலைவனின் உறுதிதான் ஒட்டுமொத்த குழுவின் வெற்றிக்கு காரணமாக அமையும்.
ஆக, நாம் தலைவாக இருக்கும் பட்சத்தில் அல்லது தலைவனாக வர விரும்பும் பட்சத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்பது நம் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பக் கூடியதாக அமைந்து விடக் கூடாது. இலக்கை அடைவோமா என்ற சந்தேகத்தை மற்றவர்களுக்கு கொடுத்து விடக் கூடாது. உங்கள் பேச்சில் எந்தவித தடுமாற்றமும் இருக்கக் கூடாது. நீங்கள் எந்தெந்த சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
நான் முயற்சிக்கிறேன் : பணியிடத்தில் நீங்கள் தலைமையாக இருக்கும்போது, நான் முயற்சி செய்கிறேன் என்ற சொல் பயன்படுத்தக் கூடாது. உங்கள் திறமை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம் வந்துவிடும். ஒரு செயலுக்கு நீங்களே முயற்சி செய்கிறேன் என்ற சொல்லை பயன்படுத்தும்போது, உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த இலக்கை அடைய முடியாது என்ற எண்ணத்திற்கு வந்து விடுவார்கள்.