முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

பணியிடத்தில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு எல்லையை அமைக்க வேண்டும். பணியிடத்தில் வரும் பிரச்னை மற்றும் பணிச்சுமையை எப்படி கையாள்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

  • 16

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    அரசு, தனியார் என எந்த நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் அலுவலகத்தில் பல பிரச்சனைகளைக் கடந்து தான் நாம் பணியாற்ற வேண்டும். போட்டி, பொறாமையால், சில நேரங்களில் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக பல சிக்கல்களை நமக்கு வழங்குவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த நிலை நமக்கு அடிக்கடி தொடரும் போது தான் மன அழுத்தமும், கவலையும் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது. எப்படி? என முதலில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    எல்லைகளை அமைக்கவும் : பணியிடத்தில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு எல்லையை அமைக்க வேண்டும். அதாவது உங்களின் முதலாளிகள் அல்லது சக ஊழியர்கள், உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என பணிச்சுமைகளை அதிகளவில் கொடுப்பார்கள். இந்நேரத்தில் நம்முடைய வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் சில நேரங்களில் நாம் செய்துவிடுவோம். இனி அப்படி இருக்காதீர்கள். உங்களுக்கு பணிச்சுமை இருக்கும் போது, உங்களுக்கு தேவையில்லாத வேலையை நீங்கள் செய்யாதீர்கள். அப்படியும் உங்களை வற்புறுத்தினால் வேண்டாம் என்று சொல்வதற்கு கற்றுக்கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    சுய பாதுகாப்பு பயிற்சி: நீங்கள் பணியாற்றும் இடத்தில் மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால் சுய பாதுகாப்பு என்பது முக்கியமானது ஒன்று. அதாவது உங்களின் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேலைப்பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் மனமும், உடலும் சேர்த்து சோர்வாகிவிடும். எனவே உங்களது வேலை நேரங்களுக்கு இடையே 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளி எடுப்பது நல்லது. இதோடு இரவில் போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதோடு உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பொழுதுப்போக்கு விஷயங்களில் ஈடுபடுவதால் மன மகிழ்ச்சியுடன் இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 46

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    ஆதரவைப் பெறுதல்: நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் பல பிரச்சனைகளால் உங்களுக்கு நிச்சயம் மன நிம்மதி இருக்காது. எனவே இந்த சூழலில் நீங்கள் உங்களது உண்மையுள்ள சக ஊழியர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மனம் விட்டு பேசுங்கள். இதனால் உங்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். இவர்களிடம் பேசுவதற்கு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், மன நல நிபுணர்களிடம் பேசுவது நல்லது.

    MORE
    GALLERIES

  • 56

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குங்கள்: எப்போதும் நீங்கள் பாசிட்டிவான விஷயங்களை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அனைவரிடமும் நேர்மறையான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் போது யாராலும் உங்களுக்கு பிரச்சனை ஏற்படாது.

    MORE
    GALLERIES

  • 66

    பிரச்சனை உள்ள வேலையில் பணியாற்றுகிறீர்களா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

    வேலையை விட்டுவிடுதல்: பொதுவாக எந்த விஷயத்திலும் மன ஆரோக்கியம் இல்லையென்றால் நம்மால் பணி செய்ய முடியாது. முடிந்தவரை சமாளித்துப்பார்க்கலாம். இல்லையென்றால் வேலையை விட்டுவிடுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு பிரச்சனையாக அமையலாம். ஆனால் மன ஆரோக்கியம் இல்லாத இடத்தில் பணியாற்றுவது உங்களுக்கு உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் . இதோடு நீங்கள் செய்யும் வேலை சரியானதாக இருந்தாலும் தவறாகத் தான் சித்தரிக்கப்படுவீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவும்.

    MORE
    GALLERIES