ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

உங்கள் திருமண தேதி நெருங்கி வரும் நேரத்தில் ஜிம்மிற்க்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில படிகளை தற்போது பார்க்கலாம்..

 • 17

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  மணப்பெண்களின் முன்னுரிமை பட்டியலில் திருமண நாளில் ஃபிட்டாக தோற்றமளிக்க வேண்டும் என்பது முதலிடத்தில் இருக்கிறது. சிலர் திருமண நாள் நெருக்கத்தில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்யாமலே அல்லது ஜிம்மிற்கு செல்லாமல் ஃபிட்டாக காட்சியளிக்க பலவித ஆரோக்கியமற்ற டயட்களை கையில் எடுக்கிறார்கள். உங்களுக்கு சில வாரங்களில் அல்லது மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதா.? ஒர்க்கவுட்களில் ஈடுபடாமல் உங்கள் வாழ்வின் முக்கிய நாளுக்காக உடல் எடையை நீங்கள் குறைக்க விரும்புகிறீர்களா.? உங்களுக்கான கட்டுரை தான் இது

  MORE
  GALLERIES

 • 27

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  உங்கள் திருமண தேதி நெருங்கி வரும் நேரத்தில் ஜிம்மிற்க்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில படிகளை தற்போது பார்க்கலாம்..

  MORE
  GALLERIES

 • 37

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  ரன்னிங் : உடல் எடையை குறைத்து உடலை ஃபிட்டாக வைத்திருக்க ரன்னிங் ஒரு சிறந்த வழியாகும். உங்கள் வயிற்றை சுற்றியுள்ள கூடுதல் மடிப்பு பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் ரன்னிங் சிறப்பான பலனை தரும். திருமணத்திற்கு முன் தினம் வரை நீங்கள் தயக்கமின்றி அதிகாலையில் ஜாக்கிங் அல்லது ரன்னிங்கில் ஈடுபடலாம். ஓடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை தவிர இதய ஃபிட்னஸையும் கூட மேம்படுத்துகிறது. திருமண நாளுக்கு சில வாரங்களுக்கு நீங்கள் ஜாக்கிங்கை துவக்கலாம். திருமணத்திற்கு பின்பும் நீங்கள் இந்த பழக்கத்தை கடைபிடித்தால் எப்போதும் ஃபிட்டாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  யோகா : ரன்னிங்கை தவிர உடலை ஃபிட்டாக வைத்திருக்க யோகா பெரிதும் உதவுகிறது. யோகா உடலை வலிமையாக்குவதோடு மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த நெகிழ்வு தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மன அமைதியை பராமரிக்க உதவுகிறது. எளிதான யோகாசனங்களை முதலில் செய்ய முயற்சித்து பின் படிப்படியாக சற்று கடினமான ஆசனங்களை செய்ய துவங்கலாம். நீண்ட காலம் நீங்கள் ஃபிட்டாக இருக்க விரும்பினால், யோகா நிச்சயமாக உங்களுக்கு நல்ல விருப்பமாகும்.

  MORE
  GALLERIES

 • 57

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  டான்ஸ் : நீங்கள் பிறரை போல ஒரு வழக்கமான வழியில் ஃபிட்டாக இருக்க விரும்பவில்லை என்றால் டான்ஸ் கிளாஸ்களுக்கு செல்லலாம். ஏனென்றால் டான்ஸ் என்பது சலிப்பை ஏற்படுத்தாமல் கலோரிகளை எரிக்க நல்ல வழி. டான்ஸை நீங்கள் கற்று கொள்ளும் போது நீங்கள் தற்போது இருப்பதை விட ஃபிட்டாவது உறுதி. ஜூம்பா டான்ஸ் கிளாஸில் சேர்ந்தால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க செய்யலாம். டான்ஸ் கிளாஸில் சேர்ந்த சில வாரங்களுக்குள் உங்கள் ஆற்றல் அதிகரித்து மேலும் நீங்கள் ஃபிட்டாக இருப்பதை உணர்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 67

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  போதுமான அளவு தண்ணீர் : நபர் ஒருவர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்து ஃபிட்டாக இருக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை அடைய, நிறைய தண்ணீர் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  ஜிம்மிற்கு செல்லாமலேயே திருமண நாளில் ஃபிட்டாக தோன்ற உதவும் வழிகள்!

  போதுமான ஃபைபர் : தினமும் போதுமான அளவு ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலை ஃபிட்டாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் டயட்டில் கூடுதல் கலோரிகளை சேர்க்காமல், பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

  MORE
  GALLERIES