மனிதன் என்பவன் விருப்பு, வெறுப்பு, கோபம், பாசம், பொறாமை, வஞ்சகம் போன்ற பல்வேறு வகையான குணநலன்களின் கலவை. அன்றாட வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறோம். நம்மை சுற்றி எத்தனை விதமான மனிதர்களுடன் வாழ்கிறோம் என்பது நமக்கு நன்றாக தெரியும். நாம் பார்க்கும், பழகும் அனைவருமே நல்ல மனிதர்களாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ண முடியாது.
ஏனெனில் சில சமயங்களில் நாமே கூட எப்போதுமே வசதியாக இருக்கும் நபர்களுடன் பழக முயற்சிக்கிறோம். நாம் விரும்பும் வாழ்க்கையை உருவாக்குவதற்கு நாம் பொறுப்பு என்று நம்புகிறோம். எனவே, நீங்கள் யாருடன் உங்களைச் சூழ்ந்து கொள்ள முடிவு செய்கிறீர்கள் என்பது, நீங்கள் உலகத்தை எப்படி உணர்கிறீர்கள், சவால்களை சமாளிப்பது போன்றவற்றைப் பாதிக்கும். தவிர, நீங்கள் விரும்பும் அனைத்து நல்ல பண்புகளையும் கொண்ட ஒருவரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.
நச்சுத்தன்மை நிறைந்த உலகில், நாம் அனைவரும் சக மனிதர்களிடம் நல்ல பண்புகளை தேடி எடுக்க முயற்சிக்கிறோம். வணிக மற்றும் தனிப்பட்ட உறவுகளில் நேர்மறையான நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பது வாழ்க்கையில் அடுத்தடுத்து வளர்ச்சி அடைய மிகவும் முக்கியமானது ஆகும். இந்த நபர்கள் உங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்களாக இருப்பார்கள். அதுவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு நபரிடம் உள்ள அனைத்து நல்ல பண்புகளையும் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றாலும், நீங்கள் நெருக்கமாக இருக்க வேண்டிய ஐந்து வகையான நபர்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்..
1. புத்திசாலி: இந்த வகையான நபர்கள் உங்களை புதிய ஆர்வங்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் படைப்பாற்றலுக்கான சிறந்த ஆதாரமாக மட்டுமல்லாமல், உங்களை வளர்ச்சியை நோக்கி முன்னேற வைக்கும் பாதையாகவும் செயல்படுவார்கள். எது எப்படியிருந்தாலும், நீங்கள் எந்த பிரச்சனைகள் அல்லது குழப்பத்தை சந்திக்கும் போதும் உங்கள் அருகே ஒரு புத்திசாலி இருந்தால், அவரே உங்களுடைய ஆபத்பாந்தவனாக செயல்படுவார்.
2. ஊக்குவிப்பவர்: ஒருவரிடம் கடின முயற்சி மற்றும் உழைப்பு இருந்தால் மட்டும் போதாது அதை ஊக்கப்படுத்த நல்ல உந்து சக்தியும் தேவை. அப்படிப்பட்ட ஊக்கத்தை கொடுக்க கூடிய நபர் நம்முடன் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த வகை நபர்கள் உங்களுக்கு தேவையான போது ஊக்கப்படுத்தி, உங்கள் ஈகோவை தூண்டி அடுத்தடுத்து வெற்றி படிக்கட்டுகளில் ஏற உதவுவார்கள்.
3. பச்சாதாபமுள்ளவர்: அறிவுசார் உரையாடல்கள் நமக்கு எப்போதும் தேவையில்லை. சில நேரங்களில் நாம் அமைதியாக இருக்கக்கூடிய மற்றும் நம் மீது கழிவிரக்கம் காட்டி அரவணைக்க கூடிய ஆட்களை மனம் தேடும். அப்படிப்பட்ட நபர்கள் உங்களுடைய மோசமான சமயத்தில் தோள் கொடுத்து ஆறுதல் தருவதோடு, அடுத்த கட்டத்திற்கு நகர தேவையான வடிகாலாகவும் இருப்பார்கள்.
4. சாகசக்காரர் : நீங்கள் சலிப்பாகவும், சோர்வாகவும் உணரும் நேரங்களில், அந்த சோர்வான தருணத்தை சுறுசுறுப்பாக மாற்றக்கூடிய பூஸ்டர் டோஸ் போன்றவர்கள் இவர்கள். உங்களை உற்சாகப்படுத்தி யாருமே எட்டமுடியாத, யாருமே நினைத்துப் பார்க்காத சாகத்தை உங்களால் செய்ய முடியும் என்பதை கண்முன் காட்டக்கூடிய எனர்ஜி டானிக் போன்றவர்கள்.
5. வேடிக்கையான நபர்: வெற்றியை நோக்கி இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையை அவ்வப்போது சர்வீஸ் செய்யக்கூடிய மெக்கானிக்குகள் இவர்கள். உற்சாகம், பச்சாதாபம் ஆகியவற்றின் குணநலன்கள் இவர்களிடம் ஒருங்கே காணப்படும். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது எரிச்சலாக இருந்தாலும், இந்த நபர்கள் நிச்சயமாக உங்களை சிரிக்க வைப்பதற்காக வேடிக்கையான ஒன்றைச் செய்வார்கள். ஒரு மோசமான நாளைக்கூடிய தங்களது நகைச்சுவை அல்லது நகைச்சுவை உணர்வு மூலமாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டவர்கள்.