உணவுப் பழக்கங்கள் : பாலியல் வேட்கையை தூண்டுவதில் சில உணவுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. வாழைப்பழம், அத்திப்பழம், அவகோடா பழம் போன்றவை பாலியல் ஆற்றலை அதிகரிக்கும். அடர்த்தியான சாக்கலேட்டுகளை சாப்பிட்டால் நமது உடலில் பாலியல் உணர்வை தூண்டக் கூடிய செரோடினின் சுரப்பு அதிகரிக்கும். இந்த உணவுப் பொருட்கள் சத்தானவை என்பதை தாண்டி, பிறப்புறுப்புக்கு ரத்த ஓட்டத்தை அதிகம் தூண்டுகின்றன. இதனால், நீடித்த இன்பம் கிடைக்கும்.
தன்னம்பிக்கை : பாலியல் இன்பம் மிகுதியாக இருக்க வேண்டும் என்றால் நம் உடல் மட்டும் தயாராக இருந்தால் போதுமானது அல்ல. மனமும் அதற்கு ஈடாக தயார் நிலையில் ஆசைகள், கனவுகளுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, நம்மால் மகிழ்ச்சி அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை அவசியமானது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் பார்ட்னர் என்ன செய்தாலும் பிடிக்காமல் போகலாம்.
ஒரு கிளாஸ் ஒயின் அருந்தலாம் : மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடான விஷயம் தான். மிக அதிகமாக மது அருந்துபவர்களால் பாலியல் உறவில் ஈடுபட முடியாது. அப்படியே உறவு வைத்துக் கொண்டாலும் உச்சகட்டம் அடைய முடியாது. பெரும்பாலும் பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்காது. ஆனால், இந்தப் பழக்கம் உடையவர்கள் ஒரு கிளாஸ் அளவு மட்டும் ஒயின் எடுத்துக் கொண்டால் பாலியல் இன்பம் கூடுதலாக இருக்கும்.
தியானம் : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல பாலியல் உறவுக்கு மனமும் முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும். தினசரி தியானம் செய்து, மன அழுத்தத்தை போக்கினால், தாம்பத்ய உறவு சிறக்கும். ஏனெனில் மிக சோர்வாக இருப்பவர்களால் நிச்சயமாக பாலியல் உறவில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. யோகா செய்வதும் கூட நல்ல பலன்களை தரும்.
பந்தம் பலப்படும் : சின்ன, சின்ன சண்டை, தகராறு போன்றவை இல்லாத ஜோடிகளே கிடையாது. ஆனால், அவற்றுக்கு வடிகாலாக நல்லதொரு தாம்பத்ய உறவு அமையும். தாம்பத்யம் சிறப்பாக இருந்தால் ஆண், பெண் இடையிலான பந்தம் பலப்படும். உணர்வுப்பூர்வமாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, அன்யோன்யமாக இருப்பது ஆகியவை தாம்பத்யம் சிறப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.