ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

பார்ட்னர் என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார், அவருடைய அன்பு பாசம் குறைந்து விட்டதா என்று அவ்வப்போது சந்தேகம் ஏற்படுவது சாதாரணமானது தான்.

 • 16

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  என்னுடைய பார்ட்னர் என்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார், அவருடைய அன்பு பாசம் குறைந்து விட்டதா என்று அவ்வப்போது சந்தேகம் ஏற்படுவது சாதாரணமானது தான். திருமணமான உடனே அல்லது காதலிக்கும் போது, அந்த உறவின் தொடக்க காலத்தில் காணப்பட்ட அபரிமிதமான அன்பு நாளடைவில் குறையத்தான் செய்யும். அதனால் உங்கள் உறவு பாதிக்கப்படுகிறது அல்லது உங்கள் பார்ட்னர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம் கிடையாது. உடல் ரீதியாக காயப்படுத்துவது அல்லது சீட்டிங் என்பதைத் தாண்டி உங்களுடைய வாழ்க்கை துணை உங்களை உண்மையாகவே நேசிக்கிறார் என்றால் பின்வரும் இந்த ஐந்து விஷயங்களை நிச்சயமாக செய்ய மாட்டார்.

  MORE
  GALLERIES

 • 26

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  இவர் மிகவும் அழகாக இருக்கிறார்! : பிரபலங்கள் மீது, நடிகர் நடிகைகள் மீது ஈர்ப்பு இருப்பது சாதாரணம் தான். இது எல்லாருக்குமே பொருந்தும். ஆனால் உடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது ஒரே இடத்தில் வசிப்பவர்கள் அல்லது நண்பர்கள் மீது ஈர்ப்பு தோன்றுவது பிரச்சனையின் அறிகுறி. பக்கத்து வீட்டில் இருப்பவர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார் என்று பாராட்டுவது என்பதை ஒரு எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். உங்களுடைய கணவன் அல்லது மனைவி உங்களை உண்மையாகவே நேசித்தால் நிச்சயமாக அவ்வாறு கூற மாட்டார்.

  MORE
  GALLERIES

 • 36

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  தினசரி சின்ன சின்ன சண்டைகள் : கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் இல்லாத உறவே கிடையாது. ஆனால் தினமும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சண்டைகள் ஏற்படுவது உங்கள் உறவுக்கு ஆரோக்கியமானது இல்லை. உங்கள் பார்ட்னர் சின்ன விஷயத்துக்கு கூட உங்களிடம் சண்டை போட தயாராக இருக்கிறார் என்றால், நீங்கள் நேசிப்பது போல அவர் உங்களை நேசிக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஏனென்றால் அன்பாக இருப்பவர்கள், சின்ன விஷயங்கள் எதையுமே பெரிது படுத்த மாட்டார்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  பொது இடத்தில் உங்களை அவமானப்படுத்துவது : கணவன் மனைவி அல்லது காதலர்கள் என்று எந்த உறவாக இருந்தாலும், அந்த உறவில் பரஸ்பர அன்பு மட்டும் இல்லாமல் மரியாதையும் இருக்க வேண்டும், உறவை மதிக்க வேண்டும். உங்களை நேசித்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். ஏனென்றால் ஒரு சிலர் தன்னுடைய வாழ்க்கை துணை அல்லது பாட்னரை பொது வெளியில் எந்த காரணத்திற்காக மட்டம் தட்டலாம் என்று காத்திருப்பார்கள். அவ்வாறு நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டால் உங்களுடைய உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

  MORE
  GALLERIES

 • 56

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  உங்கள் விருப்பங்களை குறை சொல்வது : ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசித்தாலும், ஒவ்வொரு நபரும் தனித்தன்மை வாய்ந்தவர். ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம். பொதுவாக காதல் மற்றும் திருமணத்தில் எதிரெதிர் துருவங்கள் பெரிய ஈர்ப்பை கொண்டு இருக்கும்; அது நீண்ட நாள் உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறுவதுண்டு. தனக்கு எதிர்மாறாக இருக்கும் மற்றவரின் குணத்தை பழக்கத்தை தெரிந்து கொள்ளும் போது வியப்பும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆனால், உங்கள் மீது அன்பில்லாதவர், உங்களுடைய ஒவ்வொரு விருப்பத்தையும் குறை சொல்வார். உங்களுக்கு பிடித்த நடிகர் / நடிகைகள் முதல், நீங்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்சிகள், உணவு, பிடித்த நிறம் என்று எல்லாவற்றையும் குறை சொல்வார்.

  MORE
  GALLERIES

 • 66

  உங்கள் பார்ட்னர் உண்மையாக நேசித்தால் இதையெல்லாம் கட்டாயமாக சொல்ல மாட்டார்!

  உங்கள் பலவீனங்களை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார் : மேலே கூறியுள்ளது போல, உங்கள் பலவீனங்களை நன்றாக தெரிந்து கொண்டு, அதை உங்களுக்கு எதிராக பயன்படுத்தத் தயங்க மாட்டார்.

  MORE
  GALLERIES