நாம் எந்தவொரு பணியில் சேர்ந்தாலும் ஓராண்டில் எப்போது பதவி உயர்வு வரும் என எதிர்ப்பார்த்துக் காத்திருப்போம். ஆனால் அனைவருக்கும் பதவி உயர்வு மற்றும் வேலையில் அங்கீகாரம் கிடைக்காது. இதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்பார்கள். இந்த நிலையைப் பெறுவதற்கு அர்திஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் உங்களது கடினமாக உழைப்பு தான் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். ஆனாலும் உங்களால் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை என்றால், விரக்தியடைய வேண்டாம். இதோ வேலையில் பதவி உயர்வு பெறும் நபர்களின் 5 முக்கிய வழிமுறைகள் மற்றும் பழக்கங்கள் என்னென்ன? என்பது குறித்து நாமும் அறிந்துக்கொள்வோம்…
இலக்குகளை நிர்ணயித்தல் : வேலையில் நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்றால், உங்களுடைய இலக்குகளைத் தெளிவாக நீங்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தங்களது செயல்திறன் பற்றி சிந்திக்க பல நேரத்தை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். உழைப்பில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? என யோசிக்க வேண்டும். மேலும் இந்நிறுவனத்திற்கு உங்களின் மதிப்பை நிரூபிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது.
பாசிடிவ் எனர்ஜியுடன் பிரச்சனைகளை சமாளித்தல் :வேலையில் பதவி உயர்வு பெற வேண்டும் என நினைப்பவர்கள் பாசிடிவ் எனர்ஜியுடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும். வேலையில் பதவி உயர்வு பெற்றவர்கள், எந்த பிரச்சனை வந்தாலும் தடைகளை சமாளிக்க முடியும் என்று உறுதியுடன் சவால்களைக் கையாள்கின்றனர். மேலும் உங்களைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜியை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
புதிய விஷயங்களைக் கற்றல் :பெரும்பாலும் பதவி உயர்வு பெற்ற நபர்கள் தங்கள் வாழ்க்கையில் கற்கவும் வளரவும் வலுவான ஆசைகளை கொண்டுள்ளனர். அவர்கள் தொழில்முறை மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். இதோடு உங்களது துறையில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன? என்பது குறித்து அப்டேட் செய்ய வேண்டும். இவை தொழிலில் பதவி உயர்வு பெறுவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நல்ல தகவல்தொடர்பு திறன் : இவை வேலையில் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகும். பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் கருத்துக்களை எப்போதும், தெளிவான மற்றும் சுருக்கமாக வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய செயல் உங்களின் திறனை வெளிப்படுத்த உதவும். மேலும் திறமையான தகவல் தொடர்பு திறன்கள் உங்களது சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் வலுவான உறவுகளை உருவாக்க உதவுகிறது. இது முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் தரக்கூடியதாக இருக்கும்.
பெரும்பாலும் பதவி உயர்வு பெறும் நபர்கள் தங்களுடைய பணியை ஈடுபாடோடு செய்கிறார்கள். மற்றும் எந்த வேலையும் செய்வதற்கு முன்னதாக பெரும் முயற்சி எடுக்கிறார்கள். அதாவது யார் என்ன சொல்ல வேண்டும்? என எப்போதும் காத்திருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் முன்னேற்றத்திற்கானப் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும், புதிய சவால்களை எடுப்பதிலும் முனைப்புடன் செயல்படுகின்றனர். இது அவர்களின் மேலதிகாரிகளுக்கு அவர்கள் கூடுதல் பொறுப்புகளை கையாளும் திறன் கொண்டவர்கள் என்பதையும், அவர்கள் நிறுவனத்தின் வெற்றிக்காக முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.