மஞ்சள் பற்கள், தற்போது நம் அனைவருக்கும் இருக்கும் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். மேலும் பெரும்பாலான மக்கள் மஞ்சள் கரையை அகற்ற சில ட்ரிக்ஸ் மற்றும் வழிமுறைகளை வைத்திருக்கிறார்கள். மேலும் பெரும்பாலான மக்கள் சில எளிய வீட்டு வைத்தியங்களை செய்து பற்களை வெண்மையாக்கி கொள்கின்றனர். அதேபோல, நாம் தினசரி உண்ணும் பழங்கள் கூட நம் பற்களை வெண்மையாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தைப் போக்க உதவும் ஐந்து பழங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம். இந்த பழங்கள் உங்கள் பற்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளக்கச் செய்யும். அதேபோல, பழங்கள் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றன.
ப் வாழைப்பழம் : பற்களில் உள்ள மஞ்சள் நிறத்தைப் போக்க வாழைப்பழம் உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. அவை பற்களில் உள்ள அழுக்குகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பற்களை பளபளப்பாகவும் மாற்றுவது இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.
ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரிகள் சுவையில் சிறந்தவை மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையும் கூட. ஸ்ட்ராபெரியின் ஒரு நன்மை என்னவென்றால், அது உங்கள் பற்களை பிரகாசமாக்க உதவுகின்றன. இந்த பழத்தில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களில் இருந்து பிளேக்-ஐ அகற்ற உதவுகிறது. பற்கள் பளபளப்பாக இருக்க ஸ்ட்ராபெரி பழத்தை வெட்டி அதன் மீது இரண்டு சிட்டிகை சமையல் சோடாவை வைத்து பற்களில் சில நிமிடம் தேய்த்தால் மஞ்சள் படலம் நீங்கும்.