கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர்கள் தங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். தற்போது உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற பல்வேறு வடிவங்களில் மக்கள் தங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்யத் தொடங்கியுள்ளனர். உடல் எடையை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதால் மக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
உடல் எடையை பராமரிப்பதில், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் இரண்டையும் ஒருவர் தங்களது வாழ்க்கை முறையில் இணைக்க வேண்டும். நீங்கள் ஜிம்மிற்குச் சென்றாலும் அல்லது யோகா பயிற்சி செய்தாலும், அதனுடன் ஆரோக்கியமான டயட்களை சேர்த்துக்கொள்வது மிக அவசியம். அந்த வகையில் உங்கள் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் ராகி போன்ற உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ராகி ஒரு சுத்திகரிக்கப்படாத பயிர் ஆகும். இது நாட்டில் அதிக உயரமுள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது மற்றும் கடினமான காலநிலை நிலைகளில் வளரும் தன்மைக் கொண்டது. மேலும் இது இரும்பு, தாதுக்கள், கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த அதிக சத்தான தானிய பயிராகும். மேலும் ராகியை பல விதமாக சமைத்து சாப்பிடலாம். அதன்படி, நீங்கள் ராகியை வைத்து தினமும் வெரைட்டியாக சமைத்து சாப்பிடுங்கள். காட்டாயம் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் தினசரி உணவில் ராகியைச் சேர்ப்பதற்கான ரெசிபிகள் பின்வருமாறு:
1. ராகி முஸ்லி: ராகி முஸ்லி போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவோடு உங்கள் நாளை சிறப்பாக தொடங்கலாம். இது கட்டாயம் சிறந்த காலை உணவாக இருக்கும். மேலும், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவராக இருந்தால், உங்களுக்கு ஒரு கிண்ணம் ராகி முஸ்லி காட்டாயம் தேவைப்படும். இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரத உள்ளடக்கம் நீண்ட காலத்திற்கு உங்கள் வயிற்றை முழுமையாக வைத்திருக்க உதவும்.