ஆண்களை புரிந்து கொள்வது சிரமமானது என்ற பொது கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், உண்மை அது அல்ல. பொதுவாக. யாரும் கவனிக்காத, ஆண்களைப் பற்றிய பல விஷயங்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் ரகசியமாக இருக்கும். தாங்கள் நீண்ட காலமாக மறைத்து வைத்திருக்கும் உண்மைகளை, தங்கள் மனைவி அறிந்து கொள்ளக் கூடாது என்று ஆண்கள் நினைப்பார்கள்.
ஆதரவு : ஒவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத் துணையிடம் இருந்து உணர்ச்சிகரமான சப்போர்ட் (ஆதரவு) கிடைக்க வேண்டும் என்று விரும்புவார். ஆனால், அதனை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். குறிப்பாக, அலுவலகங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சமயங்களில் மனைவி தனக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்பது ஆண்களின் விருப்பமாக இருக்கும். தன் மீது மனைவி அதிக அன்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினாலும் கூட, எப்போதும் தன்னை பலமானவராக காட்டி கொள்வதிலேயே ஆண்கள் குறியாக இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை வெகுவாக பாதிக்கிறது.
அச்சம் : ஆண்கள் தங்களுக்குள் இருக்கும் அச்சத்தை ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், தங்களை பலவீனமானவர்களாக காட்டிக்கொள்வது அவர்களுக்குப் பிடிக்காது. பொதுவாகவே ஆண்கள் பலமானவர்களாக கருதப்படுவதால் சமூகத்தின் மத்தியில் தைரியசாலிகளாக காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அவ்வபோது அவர்களுக்குள் அச்சம் எட்டிப்பார்க்கும்.
சைட் அடிப்பது : பெரும்பாலான ஆண்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்களை கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணையும் நிச்சயமாக அவர்கள் சைட் அடிப்பார்கள். பெரும்பாலான ஆண்கள் தங்கள் தோற்றதால் பெண்களை வசீகரிக்க நினைப்பார்கள். பெண்களை பிடித்து விட்டால், அவர்களது பெர்சனாலிட்டி குறித்து தெரிந்து கொள்ள ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
வீட்டில் தன் தாயாருக்கும், மனைவிக்கும் இடையே சண்டை ஏற்படும் சமயங்களில் யாருக்கு ஆதரவாக இருப்பது என்பது குறித்து ஆண்களுக்கு குழப்பம் ஏற்படும். ஆனால், இரண்டு பேரிடமும் இதை காட்டிக் கொள்ள மாட்டார்கள். தாய் மற்றும் மனைவி என இருவரையும் விட்டுக் கொடுக்காமல், ஒரே சமயத்தில் இருவரையுமே ஆதரிப்பதை போல பேசுவார்கள்.