நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுவதால், பொய் ஒரு நொடிக்குள் உறவுகளை அழித்துவிடும். உங்கள் வாழ்க்கை துணை உண்மைகளை மறைத்து, பொய் சொல்ல ஆரம்பிப்பது ரிலேஷன்ஷிப் விரிசலை உருவாக்குகிறது. பார்ட்னர் உண்மையை மறைத்து பொய் சொல்கிறாரா?, ஏன் அப்படி செய்கிறாரா? என்பதை கண்டுபிடிப்பது உங்களுக்கு முக்கியமானது.
வேறொரு உறவில் இருக்கிறார் : உங்களுடைய வாழ்க்கை துணை அல்லது காதலில் இருக்கும் நபர் ஒருவேளை உங்களை ஏமாற்றுகிறார் என்றால், அதற்கு முதன்மையான காரணம் அவர் வேறு யாருடனோ தொடர்பில் இருக்க வாய்ப்புள்ளது. அது உண்மையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், தீர விசாரித்து உண்மையை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களிடம் பொய் கூறுவது உங்களை விட்டு விலகிச் செல்வதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
பொருளாதார சிக்கல்கள் : பொதுவாக இது எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவம் தான். நிதி நிலை சரியில்லாத சமயத்தில், கடன் தொல்லை கழுத்தை தெறிக்கும் தருணங்களில் மனைவியிடம் உண்மையை மறைக்க கணவன் பொய் சொல்வது உண்டு. இதற்கு காரணம் தான் பட்ட மன உளைச்சலை, தனது வாழ்க்கை துணையும் படக்கூடாது என்ற எண்ணம் தான். அதேசமயம் அவர்கள் கடன் வாங்கிய பணம் அல்லது சூதாட்டப் பழக்கம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றாலும் பொய் சொல்ல நேரிடலாம்.
ரகசியங்களை பாதுகாத்தல் : கணவன், மனைவிக்குள் ரகசியங்கள் தேவையில்லை என்றாலும், சில ரகசியங்களை பாதுகாப்பது ரிலேஷன்ஷிப்பை வலுவானதாக மாற்ற உதவும். உங்களுடைய வாழ்க்கை துணை அவரைப் பற்றியோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் பகிர்ந்து கொண்ட ரகசியங்களையோ பாதுகாக்கலாம். குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் போன்ற நெருக்கமானவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயத்தை உங்களிடம் கூட சொல்லாமல் மறைக்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் பிறர் ரகசியங்களை பாதுகாக்கும் உங்கள் பார்ட்னர் நம்பகமானவர் என்றே அர்த்தம்.