மக்காச்சோளம் ஸ்னாக்ஸ் : மக்காச்சோளத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. க்காலத்தில் சுவையான மக்காச்சோளம் ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம். முதலில் மக்காச்சோளத்தை எடுத்து கிரில்லில் வைக்கவும். அடிக்கடி இரண்டு பக்கமும் திருப்பி நன்கு வேக விடவும். பின்னர், அதனை எடுத்து உதிர்த்து உப்பு, மிளகு தூள் அல்லது சாட் மசாலா, சிறிது வெண்ணெய் சேர்த்து சூடாக சாப்பிடலாம்.
மக்காச்சோளம் ரெசிபி 2 : முதலில் சோளம், உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த சோளம், உருளைக்கிழங்குடன் நறுக்கிய வெங்காயம், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், சாட் மசாலா, கரம் மசாலா, துருவிய சீஸ், உப்பு, கொத்தமல்லி இலைகள், பிரெட் கிரம்ஸ், சோள மாவு ஆகியவற்றை கலந்து கொள்ளலாம். இதனை வடையை போல் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, தவாவில் உள்ள லேசான எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறலாம்.
பார்பிக்யூ பன்னீர் : பன்னீரை சுவையான பார்பிக்யூ முறையில் செய்தால் அனைவரும் சாப்பிட விரும்புவார்கள். முதலில் பன்னீரை க்யூப்ஸாக வெட்டி தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தயிரை எடுத்து, அது மென்மையாகும் வரை நன்கு கலந்து, அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் மஞ்சள் தூள் , சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை எடுத்து பன்னீர் க்யூப்ஸில் தடவவும். இதனை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் அதை அப்படியே வைக்கவும் . பின்னர் அதனை எடுத்து ஒரு ஸ்டிக்கில் ஒரு பன்னீர், ஒரு வெங்காய துண்டு, ஒரு கேப்ஸிகம் என சொருகவும். பின்னர் இதனை கிரில் பேனில் இரண்டு பக்கமும் சமைக்கவும். இதனை பச்சை சட்னி யுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கிரில் அன்னாசி : கிரில் அன்னாசி வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபியாகும். அன்னாசி பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் வெண்ணெய், மிளகு, தேன் மற்றும் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்கு பின்னர் கிரில்லை குறைந்த வெப்பத்தில் சூடாக்கி, அதன் மீது அன்னாசி பழங்களை வைக்கவும் . இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்து சூடாக பரிமாறவும்.