நம்மில் பலருக்கு மன நிம்மதி மற்றும் சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வு வேண்டும் என்றால் தனிமையாக இருக்க விரும்புவோம். நிச்சம் தனிமை பல விஷயங்களை யோசித்து செயல்படுவதற்கு உதவியாக இருப்பதோடு நமக்கு ஒரு வித புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். தனியாக உங்களது நேரத்தை செலவிட இந்த விஷயங்களை கொஞ்சம் பாலோ பண்ணுங்க… இதோ என்னென்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்…
தனியாக நேரத்தை செலவிட சில வழிகள் : பயணம் : பயணம் ஒரு முடிவில்லாதது. உலகில் பார்ப்பதற்கும், பல விஷயங்கள் குறித்து ஆராய்வதற்கும் நிறைய இருக்கிறது. உங்களது பிடித்த இடங்களுக்கு தனியாக காரில், பஸ், ரயில், பைக் போன்றவற்றில் நீங்கள் பயணம் மேற்கொள்ளலாம். பல இடங்களுக்கு செல்லும் போது புதிய புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்வதோடு உங்களது மனதிற்கும் ரிலாக்ஸ் ஆ இருக்கும். இதன் மூலம் ஒரு சுதந்திரமான உணர்வை நீங்கள் பெறுவீர்கள்.
வீட்டை சுத்தம் செய்தல் : வீட்டில் குழந்தைகள் உள்பட பலர் இருக்கும் போது, நம்மால் வீடுகளை சுத்தம் செய்ய முடியாது. எனவே தனியாக இருக்கும் நேரம் உங்களுக்கு கிடைத்தால் முடிந்தவரை உங்களது வீடுகள் மற்றும் அறைகளை சுத்தம் செய்யுங்கள். தேவையில்லாத துணிகள் மற்றும் உபயோகிக்காத துணிகள் எதுவும் இருந்தால் அதை ஒதுக்கி வைத்து விட்டு மற்ற ஆடைகளை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.
சமையல் : ஒவ்வொரு நாளும் அவசர அவசரமாக சமைத்து விட்டு பணிகளுக்குச் செல்வோம். ஒரு வேளை விடுமுறையில் நீங்கள் மட்டும் வீட்டில் இருந்தால் உங்களுக்குத் தேவையான உணவுகளை நீங்களே சமைக்கவும். புதிய புதிய டிஸ்களை நீங்கள் செய்து பக்கத்து வீட்டார்களுக்கும் பரிமாறுங்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கைவினைப் பொருள்கள் உருவாக்குதல் : வீட்டில் உங்களது குழந்தைகளுடன் இருக்கும் போது அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். மேலும் மரச்சாமான்கள் கொண்டு பொம்மைகள் செய்வது, வீட்டு அலங்காரம், கூடை பின்னுவது போன்ற கைவினைப் பொருள்களைச் செய்யலாம். இதோடு உங்களின் சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கும் பணிகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.
திரைப்படங்கள் பார்த்தல் : வீட்டில் திரைப்படங்களைப் பார்க்க உங்களுக்கு எந்த துணையும் வேண்டும் என்று நினைக்காதீர்கள். தனிமையில் இருக்கும் போது தான் விருப்பமான ஓடிடி இயங்குதளத்தை இயக்கி, முதுகிற்கு வசதியாக தலையணை வைத்துப் பாருங்கள்.. இதோடு பிடித்த ஸ்நாக்ஸ் மற்றும் கூல்டிரிங்க்ஸ் குடிக்கும் போது உங்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.