திரும்பும் திசையெல்லாம் கண்கொள்ளாத இயற்கை அழகை கொண்டிருப்பதால் கேரளம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்ப்பதாக உள்ளது. குறிப்பாக, மலைத் தொடர்ச்சிகள், அருவிகள், கடற்கரைகள் போன்றவற்றுக்கு குறைவில்லை. தற்போதைய மழைக் காலத்தில் கேரளாவில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 10 விஷயங்களை இந்த செய்தியில் பட்டியலிட்டிருக்கிறோம்.
நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிக்கலாம் : கேரளாவில் மிகப் பெரிய அளவிலான அழகிய நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன. குறிப்பாக இந்த மழைக்காலத்தில் அவற்றை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். கொச்சியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அதிரப்பள்ளி மற்றும் வாளாச்சல் போன்ற நீர்வீழ்ச்சிகளை தவறாமல் பார்வையிட வேண்டும்.