இவ்வளவு அழகாக இருந்தும் ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள்? நீங்கள் சிங்கிளாக இருப்பதைப் பற்றி யாரேனும் அடிக்கடி தங்களது கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தால், அதனை காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். ஒருவர் உறவில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். இதை பற்றி அடிக்கடி கேள்வி எழுப்புவது சரியான செயல் அல்ல.
நீங்கள் மிகவும் வலிமையானவர்! உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் யாரேனும் உங்களிடம் வந்து நீங்கள் மிக தைரியமானவர், வலிமையானவர் என்று உங்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தால் அதனை கண்டு கொள்ள வேண்டாம். உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். கோபம் வந்தால் கோபப்படுவதும், அழுகை வந்தால் அழுவதும் தான் மிகச் சரியான அணுகுமுறை.