“ஊரே சேர்ந்து திருப்பதிக்கு போயிருக்கு..” எல்லா வீட்லயும் பூட்டு - இப்படி ஒரு ஊரா?
Krishnagiri News : கிருஷ்ணகிரி அருகே கிராமத்தையே காலி செய்து திருப்பதி கோவிலுக்கு சென்ற கிராம மக்கள். கிராமமே வெறிச்சோடியதால் பாதுகாப்பு பணியில் போலீசார்.
செய்தியாளர் : குமரேசன் - கிருஷ்ணகிரி
மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள வசந்தபுரம் கிராமம் உள்ளது.
2/ 7
இந்த கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
3/ 7
இந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர் குல வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் வீட்டில் பணம் சேர்த்து அந்த பணத்தில் திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
4/ 7
அதனடிப்படையில் இந்த ஆண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாங்கள் சேமித்து வைத்த பணத்தில் திருப்பத்திக்கு சென்றுள்ளனர்.
5/ 7
இதில் வயதான முதியவர்கள் சிலர் மட்டுமே கிராமத்தில் உள்ளனர்.
6/ 7
இதனால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.
7/ 7
இந்த தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.