முகப்பு » புகைப்பட செய்தி » கரூர் » கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

Karur News : கரூர் அருகே ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவில் ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது. செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

 • 18

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  அந்தவகையில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகங்கள் நடத்தி பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு 6ம் கால யாக பூஜை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 38

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  பின்னர் சிவாச்சாரியார் புண்ணிய தீர்த்தத்திற்கு பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு கலசங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர்.

  MORE
  GALLERIES

 • 48

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  பின்னர் கோபுர கலசத்தை சென்றடைந்ததும், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசத்திற்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு தீபம் காண்பிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  அப்போது பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
  தொடர்ந்து மூலவர் புது வாங்கலம்மனுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 68

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 78

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கிலோ கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 88

  கரூர் ஸ்ரீபுதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.. ஹெலிகாப்டரில் தூவப்பட்ட மலர்கள்

  கும்பாபிஷேக விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  MORE
  GALLERIES