முகப்பு » புகைப்பட செய்தி » கரூர் » கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

karur fresh fish | இயற்கையை ரசித்து கொண்டே பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த இடத்திற்கு வந்து கட்டாயம் ட்ரை பண்ணலாம்.

 • 17

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஏற்ற ஒரு ஸ்பாட் குறித்து தெரியுமா உங்களுக்கு. இப்படிப்பட்ட ஸ்பாட் மாயனூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  கரூர் டவுனில் இருந்து முசிறி செல்லும் சாலையில் மாயனூர் தடுப்பணை அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது இந்த தடுப்பணை.

  MORE
  GALLERIES

 • 37

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  சுமார் அரை மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம். மாயனூர் தடுப்பணையிலிருந்து காவேரி ஆறு மெல்ல நடைபோட்டுக் கொண்டிருக்க அருகிலேயே ஆற்றிலிருந்து மீனவர்கள் வித விதமான மீன்களைப் பிடித்து ஆற்றங்கரை ஓரத்தில் அடுக்குகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 47

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. "கிலோவுக்கு 80 ரூபா கொடுத்தா போதும்.. இங்க வாங்க 60 ரூபா கொடுத்தா போதும்" என்று குறைந்த விலையில் இங்கு மீன்களை விற்பனை செய்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  இதில் ஸ்பெஷல் என்னவென்றால், பிடித்துவைத்த மீன்களை ஒரு வலையில் கட்டி ஆற்று நீருக்குள்ளேயே வைத்திருக்கின்றனர். இந்த மீன் தான் வேண்டும் என்று நாம் சுட்டிக் காட்டியதும், உடனடியாக உயிருடன் உள்ள அந்த மீன்களை வெட்டி சுத்தப்படுத்தி நம் கைகளில் கொடுத்து விடுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  இந்த பகுதியில் மீன்களை வறுத்துக் கொடுப்பதில்லை என்றாலும், இங்கு வரும் பொதுமக்கள் ஆற்றங்கரை அருகிலேயே அடுப்பு மூட்டி ப்ரஷ்-ஆன மீன்களை வறுத்தும், குழம்பு வைத்தும் ருசிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  கரூர் போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு ஸ்பாட்..! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

  ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, சலசல வென்ற காவேரியின் இசைக்கு இடையே, ஆஹா ஓஹோ என்று மொறுமொறு மீன் சாப்பிட இங்கு சென்று வரலாம். கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும் ஒரு நாளில் சென்று வர ஏற்ற 'பக்கா டூரிஸ்ட் ஸ்பாட்டாக' மாயனூர் உள்ளது.

  MORE
  GALLERIES