கோதையாற்றின் இடதுபக்கக் கரையில் அருவிக்கும் நீா்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இந்த கோவில் பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமாக போற்றப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.