நீ வருவாய் என : அஜித், தேவயானி, பார்த்திபன் நடித்த ‘நீ வருவாய் என’ படத்தில் இடம்பெற்ற, ‘ஒரு தேவதை வந்து விட்டாள்’ பாடலில் பெரும்பாலான காட்சிகள் இந்த திற்பரப்பு அருவியில்தான் எடுக்கப்பட்டன. இதில் ஒரு காட்சியில் தூண் மண்டபம் காட்டப்பட்டிருக்கும். மேலும், தேவையாணியும், பார்த்திபனும் அருவி முன் நடந்து செல்லும் காட்சியும் இங்குதான் எடுக்கப்பட்டது.
தேவா : நடிகர் விஜய் நடித்த தேவா படத்தில் ‘சின்ன பொன்னு சின்ன பயன் காதலிச்சா ஒரு பாட்டு வரும்’ என்ற பாடலில் இந்த அருவி காட்டப்பட்டிருக்கும். மேலும், அருகில் இருக்கும் தூண் மண்டபமும் காட்டப்பட்டிருக்கும். இதே படத்தில், மற்றொரு பாடலான ஒரு ‘கடிதம் எழுதினேன்’ பாடலிலும் இந்த அருவியை காட்டி இருப்பார்கள்.