ஹோம் » போடோகல்லெரி » கன்னியாகுமரி » சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

Kanyakumari District | கன்னியாகுமரி மாவட்டத்தில், அடர்ந்த காட்டுப்பகுதியான பேச்சிப்பாறையை அடுத்துள்ள குற்றியார் பகுதியில் அமைந்துள்ளது இரட்டை அருவி. மலைப் பகுதிகளிலிருந்து குளிர்ந்து பொங்கிவரும் இந்த அருவியில் குளிப்பது தனிசுகம்.

 • Local18
 • 17

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  மாவட்டம் நாகர்கோவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது குற்றியாறு. இது மலைவாழ் மக்கள் வசிக்கும் சிறிய வனக் கிராமம் ஆகும். பேச்சிப்பாறை அணையின் ஜீரோ பாயின்ட் பகுதியில் இருந்து, இங்கே செல்வதற்கு 15 கிலோ மீட்டர் வனத்துக்குள் பயணிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 27

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  குற்றியாறு அருவியின் ஆற்றின் கரை வரையிலதான் வாகனங்கள் செல்லும். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் தூரம் ஆற்ங்கரையை ஒட்டி நடந்து சென்று அழகும் குளிர்ச்சியும் தவழும் இந்த அருவியை அடையலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து வரும் தண்ணீர் என்பதால் எத்தகைய வெயிலிலும் குளுமை மாறாமல் இருக்கும். இதனால் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும்.

  MORE
  GALLERIES

 • 47

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடும் இயற்கை அருவியாக மாறும் குற்றியாறு. மலை ஆற்றில் பாய்ந்துவரும் வெள்ளம் இரண்டாகப் பிரிந்து இங்கே இரண்டு அருவிகளாகக் கொட்டுகிறது. மழைக்காலங்களில் இந்த அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும். கோடைக் காலத்தில் குளிர்ந்து மகிழ சுகமளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 57

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  அங்கே மேலிருந்து கொட்டும் இரண்டு அருவிகளிலும் மாறி மாறிக் குளித்து மகிழலாம். மேலும், பாறைகளுக்கிடையில் குளம் போன்று தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நீநிதியும் என்ஜாய் பண்ணலாம். இது ஒரு சிறந்த அனுபவத்தையும், உற்காகத்தையும் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  இந்த குற்றியாறு செல்வதற்கு நாகர்கோவில், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ் வசதிகள் இருக்கின்றன. பெரும்பாலும், பகல் நேரங்களில்தான் பேருந்து வசதி இருக்கும் என்பதாலும், இது வனப்பகுதி என்பதாலும் காலையில் சென்று மாலைக்குள் திரும்பிவிடுவதே சிறந்தது.

  MORE
  GALLERIES

 • 77

  சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

  குற்றியாறு செல்வோர், அப்படியே அருகில் இருக்கும் திற்பரப்பு அருவிக்கும் சென்று வரலாம், அத்துடன், பேச்சிப்பாறை அணை, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய இடங்களுக்கும் சென்று வரலாம்.

  MORE
  GALLERIES