கடந்த 2017ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. அதனை தொடர்ந்து சிலையை பராமரிக்க உயர்மட்ட குழுவினர் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு, ஒரு கோடி ருபாய் திட்ட மதிப்பில் ரசாயனக் கலவை பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து ரசாயானக்கலவை பூசும்பணி கடந்த ஜூன் மாதம் 6 ம் ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சாரம் அமைக்கப்பட்டு திருவள்ளுவர் சிலையில் சுண்ணாம்பு கலைவை பூசப்பட்டது. தொடர்ந்து தண்ணீரால் சுத்தம் சிலை செய்யப்பட்டது.
அதன் பின் மழை பெய்து வந்த நிலையில் பராமரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டது, தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் மீண்டும் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக உப்பு படிமங்களை அகற்றும் காகித கூழ் ஒட்டும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக சிலையின் தலைப்பாகத்தில் காகிதக்கூழ் பூசும் பணி நடைபெற்று வருகிறது. சிலை முழுவதும் காகிதக்கூழ் பூசப்பட்ட பின்பு மீண்டும் தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்படும். இதைத்தொடர்ந்து பாலி சிலிக்கான் என்னும் ரசாயனக்கலவை பூசும்பணி நடைபெறும்.
இப்பணிகள் இன்னும் ஓரிரு மாதங்கள் வரையிலும் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது. அது வரையிலும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மட்டும் சுற்றுலா பயணிகள் சென்று வரும் விதமாக படகு சேவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: ஐ.சரவணன் - நாகர்கோவில்