சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரவு நேரம் என்றும் பாராமல் குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கிணற்றில் விழுந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணி தண்ணீரை வாரி தேடியுள்ளனர். சிசிடிவியிலும் குழந்தை பதிவாகதால், குழந்தை அருகில் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து போலீசார் வீடு வீடாக சென்று குழந்தை இருக்கிறதா என சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
அப்போது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள தென்னந்தோப்பில் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதனை கேட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது மந்திரவாதி ஒருவர் காணாமல் போன குழந்தையை மடியில் வைத்து பூஜை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.