முருகப் பெருமான் தன் அன்னை பார்வதியின் வழிகாட்டல் படி, தனது தோஷம் நீங்குவதற்காக இங்கே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று ஸ்தல வரலாறு சொல்கிறது. அந்த அளவிற்குபுகழ்பெற்ற திருத்தலமா இந்த குகநாதீஸ்வரர் கோவில் திகழ்கிறது. முருகப் பெருமான் குகன் என்ற பெயரில் நாதனை வழிபட்டதால் குகநாதீஸ்வரர் என்று அழைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.