முகப்பு » புகைப்பட செய்தி » கன்னியாகுமரி » கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

Mathur Thottipalam | கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அழகான இடமாகும். சுற்றுலா பயணிகளே இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க.

  • Local18
  • 110

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    மாவட்டத்தில் உள்ள மாத்தூா் தொட்டிப்பாலம் மிகவும் புகழ்பெற்றது. 1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது, ஆசியாவின் மிக உயரமானதும், மிகவும் நீளமானதுமான தொட்டிப் பாலம் என்று போற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 210

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    இந்த தொட்டிப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. பாலத்தின் உள்ளே தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டதாகும்.

    MORE
    GALLERIES

  • 310

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    தண்ணீா் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. இந்த பாலத்தின் மூலம், மலையின் ஒரு பகுதியில் இருந்து தண்ணீர் பாசனத் தேவைக்காக விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 410

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் இது தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 510

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    இந்த பாலம், தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 610

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    இதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது. இந்த நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

    MORE
    GALLERIES

  • 710

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    சுற்றுலா பயணிகள் இந்த தொட்டிப்பாலத்தை பார்வையிட்டு மகிழ, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 810

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரின் முயற்சியால் கட்டப்பட்ட இந்தப் பாலம், பிரபல சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 910

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    இந்த தொட்டிப்பாலமானது அருவிக்கரை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது. இது திருவட்டாரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலையிலும் அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 1010

    கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

    இந்த மாத்தூா் தொட்டிப்பாலம் பகுயில் குழந்தைகள் பூங்காவும், குளித்து மகிழ்வதற்கான நீராடும் துறையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை பார்வையிட்டு கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கே சென்று வர மறக்காதீங்க.

    MORE
    GALLERIES