அந்த வரிசையில் வியக்கத்தக்க சிற்பம் ஒன்று இருக்கிறது. அது சீனாவின் மதகுருவும், கல்வியாளரும், போற்றுதலுக்கு உரிய பயணியும், மொழிபெயர்ப்பாளருமான யுவான் சுவாங்கின் சிற்பம். இவர் சீனாவில் இருந்து பல்லவர் காலத்தில் காஞ்சிக்கு வந்து சென்றவர். இவரது பயணம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தின.
வைகுந்தப் பெருமாள் கோவிலின் தென் கிழக்கு சுவற்றில் சுவான்சாங் என்று அழைக்கப்படும் யுவான் சுவாங்கின் சிற்பத்தை பார்க்க முடியும். வரலாற்று சிறப்புமிக்க இந்த சிற்பம் யுவான் சுவாங்கின் சிறப்ம்தான் என்று ஆய்வாளர்கள் எடுத்துக்கூறுகின்றனர். அவரின் வருகையையும், சீனாவுடனான உறவையும் போற்றும் வகையில், பல்லவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.