சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வல்லபாச்சார்யர் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, முதன் முதலில் இட்லி படைத்தவர் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் படைத்தாராம். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சுவையும் சத்தும் நிறைந்த இந்த காஞ்சிபுரம் இல்லியை பலரும் விரும்வி சாப்பிடுகின்றனர்.
காஞ்சிபுரம் இட்லி செய்முறை: முதலில் பச்சரிசி, தோல் நீக்கிய உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சுமார் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நக்கு ஊறிய பின்னர், அத்துடன் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த மாவுடன் மிளகு, சீரகம், சுக்கு, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து 7 ஏழு மணி நேரம் புளிக்கவைக்க வேண்டும்.
பின்னர், மந்தாரை இலையில் மூங்கில் குடலையில் இட்டு அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர், சுமார் மூன்று மணி நேரம் வேகவைக்க வேண்டும். வெந்த பின்னர் பார்ப்பதற்கு இது, வெள்ளை நிறத்தில், பெரிய சைஸ் குழவிக் கல் அளவிற்கு இருக்கும். பின்னர் துண்டு துண்டாக வெட்டி பரிமாறப்படுகிபறது. இதனுடன் கொடுக்கப்படும் இட்லிபொடியுடன் சாப்பிடும்போது அதன் சுவையும் மணமும் ஆளையே மக்கும்.