சிவனடியார்களுக்கு முதலில் ஆடை வெளுத்துக்கொடுத்து, அதன்பிறகு மற்றவர்க்கு ஆடைகளை வெளுத்துக் கொடுக்கும் தம் குலத்தொழிலை மேற்கொண்ட ஏகாலியர் குலத்தில் தோன்றிய திருக்குறிப்புத்தொண்ட நாயனாரின் தொண்டை சோதிக்கும் பொருட்டு ஒரு மழைக்காலத்தில் சிவபெருமான் உடல் மெலிந்த வறியவர் போல் மிகவும் அழுக்கேறிய ஆடையுடன் தவ முனிவர் வேடமிட்டு திருக்குறிப்புத்தொண்ட நாயனார் முன் வந்து நின்றார்.
அதனைக் கண்ட திருக்குறிப்புத்தொண்டர் மனதில் தோன்றிய அன்புக் கண்ணீரைப் பெருக்க கைகளை குவித்து வணங்கி நின்று கொண்டிருந்தார்.பின்னர் சிவபெருமான் அவரின் திருத்தொண்டின் நிலைமையை கண்டு நீ இனி,என்றும் நிலைத்திருப்பதான சிவலோகத்தில் எப்போதும் பிரியாது வாழ்வாயாக என அருளி திருக்குறிப்புத்தொண்ட நாயனாரை முத்தி அடைய செய்தார். ஆதலால் இக்கோவிலுக்கு முத்தீசுவரர் என பெயர் வந்தது.