ஒரே நேரத்தில்... அதுவும் ஒரே ’பாய் பிரண்ட்’ மூலம்...! வினோதமான விருப்பத்துடன் இரட்டை சகோதரிகள்
உலகின் மிக அதிக ஒற்றுமைகள் மிக்க இரட்டையர்களாக அறியப்படும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தங்களது ஒரே நண்பர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் தங்களது ஒரே நண்பர் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர்


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த அன்னா மற்றும் லூசி டிசிங்க் ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். 34 வயதான இவர்கள் உலகின் மிகவும் அதிக ஒற்றுமையுள்ள இரட்டையர்களாக அறியப்படுகிறார்கள்.


ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக தூங்குவது, ஒரே நேரத்தில் ஒன்றாக மற்ற அனைத்து வேலை செய்வது என்று இந்த இரட்டையர்கள் பிரிவதே இல்லை.


இந்த நிலையில், இருவருமே தங்களது நண்பரான பென் பைர்ன் மூலம் கர்ப்பம் தரிக்க விரும்பியுள்ளனர். அதுவும், ஒரே நேரத்தில் இருவரும் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


சாதாரண முறையில் உடலுறவு மூலம் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு மிகமிக குறைவு என்பதால், ஐ.வி.எப் எனும் முறையை இருவரும் முன்வைக்கின்றனர்.


அதாவது, பென் பைர்ன்-ன் விந்தணுக்களை, இரட்டையர்கள் இருவரின் கரு முட்டைகளில் ஒரே நேரத்தில் செயற்கை முறையில் செலுத்தும் போது, இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதால், இம்முறையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.