அரிய வெள்ளை புலிக்குட்டியை நிராகரித்த தாய்ப்புலி.. தத்தெடுத்த மிருகக்காட்சி சாலை இயக்குநர் மனைவி.. நிக்கராகுவா நெகிழ்ச்சி..
நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில், ஒரு ஜோடி மஞ்சள் மற்றும் கருப்பு நிற பெங்கால் புலிகள் இருக்கும் நிலையில், நாட்டிலேயே நீவ் தான் முதல் வெள்ளை புலி என்று தி வைல்ட் கேட் சரணாலயத்தின் வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. (புகைப்படங்கள் : EPA & DailyMail)


நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில் (Nicaragua zoo) ஒரு அரிய வெள்ளை புலிக்குட்டி பிறந்துள்ளது. இதற்கு "நீவ்" (Nieve) என பெயரிட்டுள்ளனர். "நீவ்" (Nieve) என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் பனி என்று பொருள். ஒரு வாரத்திற்கு முன்புதான் நீவ் பிறந்தது.


பிறக்கும்போதே வெறும் ஒரு கிலோகிராம் எடை இருந்ததாக மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் எட்வர்டோ சகாசா (Eduardo Sacasa) கூறியுள்ளார். பாதுகாப்பு குழு WWF (Conservation group WWF) வெள்ளை புலிகளை "ஜெனெடிக் அனாமலி" ("a genetic anomaly") என்று விவரிக்கிறது, இந்த வகையான புலிகள் காடுகளில் இருப்பதில்லை. ஆனால் கூண்டிற்குள் அடைக்கப்பட்டதில் பல டஜன் புலிகளும், புலிக்குட்டிகளும் உள்ளன.


மினசோட்டாவிலுள்ள (Minnesota) தி வைல்ட் கேட் சரணாலயத்தின் (The Wildcat Sanctuary) அறிக்கையின் படி, வெள்ளை புலிகள் வங்காள புலிகள் (White tigers are Bengal tigers), அவற்றின் பெற்றோர்கள் மந்தமான மரபணுவைக் (recessive gene) கொண்டுள்ளது.


ஆனால் அவை அல்பினோஸோ (albinos) அல்லது தனி இனங்களோ இல்லை. சில பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளில் வெள்ளை புலிகள் இனப்பெருக்கம் செய்கின்றன, ஏனெனில் வெள்ளை புலிக்குட்டிகள் அதிக பார்வையாளர்களை ஈர்க்கின்றன, உண்மை என்னவென்றால், புலிக்குட்டிகளில் இத்தகைய மாற்றம் குறைபாடுகள் மற்றும் பிற மரபணு சிக்கல்களினால் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கின்றன.


நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில், ஒரு ஜோடி மஞ்சள் மற்றும் கருப்பு நிற பெங்கால் புலிகள் இருக்கும் நிலையில், நாட்டிலேயே நீவ் தான் முதல் வெள்ளை புலி என்று தி வைல்ட் கேட் சரணாலயத்தின் வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் குட்டியின் தாய் புலி சர்க்கஸால், இந்த வெள்ளை புலி குட்டியை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது. இதனால் நீவ் தனது தாய் புலியிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.


இப்போது புலிக்குட்டியை மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் எட்வர்டோ சகாசாவின் (Eduardo Sacasa) மனைவி மெரினா ஆர்குவெல்லோவால் (Marina Arguello) கண்ணும் கருத்துமாக பத்திரமாக வளர்த்து வருகின்றனர்.


அதுமட்டுமில்லாமல் மெரினா, சுமார் 700 விலங்குகள் இருக்கும் மிருகக்காட்சிசாலையையும், ஒரு மீட்பு மையத்தையும் நிர்வகிக்க உதவி வருகிறார். குழந்தைகளிடம் பேசுவதை போல மெரினா ஆர்குவெல்லோ (Marina Arguello) அந்த புலி குட்டியின் காதில் கதைகள் சொல்லி குட்டியை உற்சாகப்படுத்துகிறார்.


புலிக்குட்டியை பற்றி மெரினா கூறுகையில் "அவள் பசி வந்தால் பொறுப்பதில்லை, ஒவ்வொரு மூன்று மணி நேர இடைவெளியில் புலிக்குட்டிக்கு ஒரு பாட்டில் பால் கொடுக்கப்படும், இல்லையென்றால், கத்தி அழுது என்னை ஒரு வழிபடுத்திவிடுவாள். பால் கொஞ்சம் குளிராக இருந்தால் கூட, என்னை திட்டாத குறைதான்" என்று மெரினா அர்குவெல்லோ கூறினார்.