அமெரிக்க அதிபராக தான் இருந்திருக்கா விட்டால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் போர் மூண்டிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2/ 5
தொடர் சர்ச்சைகளால் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.
3/ 5
அப்போது கிம் ஜாங் உன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய தகவல் தனக்குத் தெரியும் என்றார்.
4/ 5
அதனை தற்போது வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார்.
5/ 5
கிம் நலமுடன் இருப்பதாகத் தான் நம்புவதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் தெரியவரும் என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.