ஒட்டகச்சிவிங்கியை கொன்று இதயத்தை காதலர் தின பரிசாகக் கொடுத்த கொடூர காதலி
மெரலைஸ் வான் டெர் மெர்வே என்பவர் தனது கணவர் காதலர் தின வார இறுதியில் ஒரு விளையாட்டு பூங்காவில் வயதான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட 1,500 டாலர் செலவழித்ததை தனது முகநூல் பக்கத்தில் பெருமையாகக் கூறியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Web Desk | February 24, 2021, 10:24 AM IST
1/ 6
32 வயதான மெரலைஸ் வான் டெர் மெர்வே, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு விளையாட்டு பூங்காவில் தனது ஐந்தாண்டு கனவை நினைவாகியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் விலங்கு ஆர்வலர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
2/ 6
தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் ஒரு சிட்ரஸ் பண்ணையை நடத்தி வரும் வான் டெர் மெர்வே, தனது 5வது வயதில் வேட்டையாடத் தொடங்கியுள்ளார். வான் டெர் மெர்வே, சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் உட்பட 500 விலங்குகளைக் கொன்றுள்ளார்.
3/ 6
எனினும் ஆண் ஒட்டகச்சிவிங்கியைக் கொல்வது தென்னாப்பிரிக்காவில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களை காப்பாற்ற உதவுகிறது என்றும், இது பாதுகாப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது என விலங்குகள் எதிர்ப்பாளர் மம் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
4/ 6
இது குறித்து வான் டெர் மெர்வே தெரிவிக்கையில், இது எனது கனவு என்பதை என் கணவர் அறிந்திருந்தார். நான் ஆண் ஒட்டகச்சிவிங்கிக்காக பல ஆண்டுகள் காத்திருந்தேன். நான் இதன் தோலை நேசிக்கிறேன். இது ஆப்பிரிக்காவுக்கு ஒரு சின்னமான விலங்கு.
5/ 6
"எங்கள் திட்டங்கள் விரைவாக நடந்துள்ளது. என் கணவர் ஹெகார்ட் இது என் கனவு என்று அறிந்திருந்தார். நான் 2 வாரங்கள் ஒரு குழந்தையைப் போல இதற்காக காத்திருந்தேன், நாட்களை எண்ணினேன். உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன். ” ஒட்டகச்சிவிங்கியின் இதயம் எவ்வளவு பெரியது என்று எப்போதாவது யோசித்தீர்களா? எனகேட்டுள்ளார் . மேலும் கொல்லப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் தோலை ஒரு கம்பளமாகப் பயன்படுத்த போவதாக கூறியுள்ளார்.
6/ 6
இன்று உள்ளூர் வாசிகளுக்கு நிறைய இறைச்சி கிடைக்கவுள்ளது என கூறிய அவர், “வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டால், விலங்குகள் பயனற்றவையாகி மறைந்துவிடும். அழிவின் விளிம்பிலிருந்து நிறைய உயிரினங்களை மீண்டும் கொண்டு வர வேட்டை உதவியது என்றார்.