முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

தனியார் நிறுவனம் ஒன்று தெரிவிக்கும் விவரத்தின் படி புதினுடைய சொத்து மதிப்பு 70 முதல் 200 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  • 15

    உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

    ரஷ்யாவின் அதிபராக பல வருடங்களாக தொடரும் புதின் உலகின் பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலிலும் தொடர்ச்சியாக இடம் பிடிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி இவருடைய சொத்து மதிப்பு 70 முதல் 200 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. சர்வதேச அளவில் இவரின் செல்வாக்குக்கும், இவரின் சொத்து மதிப்பிற்கும் முக்கிய காரணி ரஷ்யாவின் எண்ணெய் வளங்கள்.

    MORE
    GALLERIES

  • 25

    உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

    பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் எப்படி? நியூயார்க் நகரின் மேயராக 12 ஆண்டுகள் இருந்த மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael bloomberg) பல ஆண்டுகளாக பணக்கார அரசியல் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 76.8 பில்லியன் டாலர்கள் என்கிறது தனியார் நிறுவனம். 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பின்னர் வாபஸ் பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 35

    உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

    இந்த பட்டியலில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள், 30 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினை கொண்ட துபாயின் அதிபர் விவகாரங்களுக்கான துணை பிரதமர் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ,14 பில்லியன் டாலர்கள் கொண்ட பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் , 8 பில்லியன் டாலர்கள் சொத்து கொண்ட செளதியின் இளவரசரும், துணைபிரதமருமான முகமது பின் சல்மான் அல் சவுத் உள்ளிட்டவர்கள் இதில் முக்கிய இடத்தில் உள்ளனர். இவர்கள் பரம்பரை பணக்காரர்கள்.

    MORE
    GALLERIES

  • 45

    உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

    தற்போது 93 வயதை எட்டியிருக்கும் இமெல்டா தான் இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண்மணிஆவார். பிலிப்பைன்ஸ்-ன் முன்னாள் அதிபர் ஃபெர்னினாண்ட் மார்கோஸின் மனைவி இவர். சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்கள்.

    MORE
    GALLERIES

  • 55

    உலக பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்- தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரஷ்ய அதிபர்

    சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வடகொரிய தலைவர் கிம்-ஜாங்-உன் னின் சொத்து மதிப்பு 5.2பில்லியன் டாலர்கள். 17 ஆடம்பர பங்களாக்கள், 100 ஆடம்பர கார்கள், ஒரு தனியார் விமானம் மற்றும் 100 அடி உயரம் கொண்ட சொகுசு கப்பலையும் இவர் கொண்டுள்ளார். செல்வாக்கும், சொத்தும் சேர்ந்து வளரும் போது முக்கிய இடத்தில் நாம் இருப்போம் என்பதை உணர்த்துகிறது இந்த பட்டியல்.

    MORE
    GALLERIES