முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 17 வயது நிரம்பிய இளம்பெண்ணை எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • 15

  உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

  வளர்ப்பு நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை அந்த நாய் கடித்ததில் அவர் படுகாயமடைந்து முகத்தில் தையல் போட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

  பெரும்பாலும் இளம் வயது பெண்களுக்கு தங்களுக்கென செல்லமாக வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதென்றால் அலாதி பிரியம். இது மேலைநாட்டு பெண்களிடம் அதிகம் காண இயலும். தங்களுக்கென ஒரு வளர்ப்பு பிராணிகளை வைத்து அதனுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அப்டேட் செய்தால் தான் அன்றைய இரவு  அவர்களுக்கு தூக்கமே வரும்.

  MORE
  GALLERIES

 • 35

  உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

  செல்ல பிராணிகளுடன் செல்ஃபி எடுக்கும் போது அசாம்விதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுப்போன்ற சம்பவம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றுள்ளது. லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

  இது தொடர்பாக லாரா அர்ஜென்டினா உள்ளூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா ? எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  உஷார்... வளர்ப்பு நாயுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

  தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் பார்த்து பழக வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES