

மினியாபிலிஸ் நகரில் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கடந்த 25-ம் தேதி போலீசார் பிடியில் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. (Image: AP)


பிளாய்டு கொலையில் தொடர்புடையடையதாக பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் அறிவித்துள்ள போதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. (Image: AP)


நியூயார்க் நகரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி ஆயிரக்கணக்கானோர் மிதிவண்டியில் பேரணி சென்றனர். (Image: AP)


நியூயார்க் சிட்டி வீதியில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றனர். (Image: AP)


காவலர்கள் பிடியில் பிளாய்டு அனுபவித்த துன்பத்தை சித்தரிக்கும் வகையில் சீட்டெல் நகரில் நூற்றுக்கணக்கானோர் கைகளை பின்புறமாக வைத்து சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.(Image: AP)


போராட்டக்களத்திற்கு செல்லும் பாதையில் மிதிவண்டி மூலம் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.(Image: AP)


இந்நிலையில் 10-வது நாளான இன்று தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (Image: AP)