

பனிச்சிறுத்தை என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இந்த உயிரினங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் இவை எந்த வகை உயிரினம் என்ற நிலைப்பாடு இன்னும் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்காத வரையில் துல்லியமாக கூற முடியாது. .


நியூ ஜெர்சி மிருகக்காட்சிசாலையில் ஏழு குட்டிகளைப் பெற்றெடுப்பதில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த பனி சிறுத்தை தனது 17வது வயதில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மிருகக்காட்சிசாலையின் இணை கால்நடை மருத்துவர் டாக்டர் அலெக்ஸ் எர்ன்ஸ்ட் கூறுகையில், "அதன் இனத்தை பாதுகாப்பதற்கும்,மிருகக்காட்சிசாலையின் எதிர்காலத்திற்கும் ஹிமானி செய்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை. எங்கள் மிருகக்காட்சிசாலையில் ஹிமானியின் குட்டிகள் தேசிய அளவில் கவனத்தைத் பெற்றுத் தந்தது மற்றும் கேப்.மே.கவுண்டி மிருகக்காட்சிசாலையை நாடு முழுவதும் அறியச் செய்தது என கூறியுள்ளார்.