ஆச்சர்யம்! ஆனால் அதிசயம் 'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' - வெறும் 50 சென்டி மீட்டர் மட்டும்தான் (படங்கள்)
ராணிக்கு நடப்பதில் பிரச்னை இருப்பதாலும், மற்ற பசுக்களை கண்டு அச்சம் ஏற்பட்டதாலும், அதனை தனியாக வைத்து நாங்கள் வளர்க்கிறோம் ஏன் அதன் உரிமையாளர் கூறுகின்றார்
புட்டி அல்லது பூடான் வகையை சேர்ந்த 23 மாத கன்றுக்குட்டியான ராணியின் உயரம் வெறும் 50 சென்டி மீட்டர் மட்டும்தான் உள்ளது. அதன் எடை 28 கிலோ உள்ளது.
2/ 9
உலகத்தின் மிக சிறிய பசுவாக உள்ளதால் பசுவின் உரிமையாளர் ஹசன் ஹௌலதார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்துள்ளார்.
3/ 9
பசுவை காண பலரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படி ஒரு பசுவை வாழ்நாளில் கண்டதில்லை என கூறிவிட்டுச் செல்கின்றனர் பார்ப்பவர்கள்
4/ 9
வங்கதேசத்தின் தென் மேற்கில் இருக்கும் நாகான் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் இருந்து ராணியை (பசுவின் பெயர் ) கடந்த ஆண்டு வாங்கினார் அதன் உரிமையாளர் ஹசன்.
5/ 9
ராணிக்கு நடப்பதில் பிரச்னை இருப்பதாலும், மற்ற பசுக்களை கண்டு அச்சம் ஏற்பட்டதாலும், அதனை தனியாக வைத்து நாங்கள் வளர்க்கிறோம் ஏன் அதன் உரிமையாளர் கூறுகின்றார்
6/ 9
இந்த (பசுவிற்கு) ராணிக்கு வெளியில் சுற்றித்திரிவது பிடிக்கும் என அதன் உரிமையாளர் கூறியுள்ளார் .
7/ 9
நாளொன்றுக்கு 2 முறை சிறிய அளவில் தவிடு மற்றும் வைக்கோல் ராணி உணவு என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார் .
8/ 9
ராணியை விற்பதற்கான எண்ணம் இல்லை என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
9/ 9
இப்போது உயரம் 61.1 சென்டி மீட்டர் கொண்ட இந்தியாவில் உள்ள மணிக்யம் என்ற பசு உலகின் மிகச் சிறிய பசுவாக உள்ளது. இதனை ராணி முறியடித்து பட்டம் சூட்ட வேண்டும் என்பது அதன் உரிமையாளரின் எதிர்பார்ப்பாக உள்ளது.