முதல் இடத்தில் புருனேயின் ராயல் ஹவுஸ் உள்ளது. புருனேயில் ஒரு சுல்தான் இருக்கிறார், அவர் பெயர் ஹசனல் போல்கியா. அவரது வீடு உலகின் மிகப்பெரிய வீடு என்று நம்பப்படுகிறது. புருனேயின் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 28 பில்லியன் டாலர்கள். சுல்தானிடம் பல தனியார் ஜெட் விமானங்கள், நூற்றுக்கணக்கான கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது
கத்தார் ராயல் ஹவுஸ்- கத்தார் தானி ராயல் ஹவுஸால் ஆளப்படுகிறது. ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தலைமை தாங்குகிறார். இந்த குடும்பம் 1850 முதல் கத்தாரை ஆட்சி செய்து வருகிறது. நியூயார்க்கின் புகழ்பெற்ற கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இந்தக் குடும்பத்துக்கு பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த சொத்து மதிப்பு 335 பில்லியன் டாலர்கள்.