தீவில் தனியாக மாட்டிக்கொண்ட நாய் ஒன்றிற்கு மறுவாழ்வு அளித்துள்ளார் புகைப்பட கலைஞர் ஒருவர். பார்பதற்கே எலும்பும் தோலுமாய் உடல் வற்றி மெலிந்த நிலையில் நாய் ஒன்றை மீட்டுள்ளார் புகைப்பட கலைஞர் வெஸ்லி வைட் ( Wesley White ) வெஸ்லி பிசினெஸ் ட்ரிப்பிற்காக வட அமெரிக்க நாடான பெலிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். புகைப்படத்தில் ஆர்வம் கொண்ட வெஸ்லி அங்கு உள்ள ஒரு தீவினை சுற்றி பார்க்க ஆசை பட்டு படகில் பயணித்துள்ளார். அப்போது மிகவும் உடல் மெலிந்து தன்னை காப்பாற்ற யாரேனும் வருவரா ? எனும் நோக்கில் நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது அவரது கண்ணில் தென்பட்டுள்ளது.   அதனை கண்ட வெஸ்லி நிலை குலைந்து போனார். அதற்கு மறுவாழ்வு குடுக்க முடிவு செய்து தனது படகில் எடுத்து கொண்டு வந்துள்ளார். தனது வீட்டிற்கு எடுத்து வந்தது மட்டும் அல்லாமல் அதற்கு தேவையான அனைத்தையும் வழங்கி அதன் வாழ்வை வளமாக்கியுள்ளார்.   ஏற்கனவே தனது வீட்டில் 2 நாய்களை வளர்த்து வரும் அவர் மூன்றாவதாக இதையும் இணைத்து கொண்டார். தற்போது நல்ல உடல் நலத்தோடு நாய் பத்திரமாக உள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றுளளது. தற்போது வரை வெஸ்லியின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. வெஸ்லியின் நாய்க்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.