முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

1980 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்கச் செல்லும் போது பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச ஒப்பந்தங்கள் அந்தந்த நாடுகளினால் இயற்றப்பட்டன. இதன்மூலம் மீன் பிடிக்க செல்லும் கப்பல்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கொட்டுவது தவிர்க்கப்பட்டது.

 • 17

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  கிட்டத்தட்ட 171 ட்ரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல்களில் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 1979 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த தரவுகள் அவர்களுக்கு கிடைத்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  அட்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் இருந்து 12,000 மாதிரி புள்ளிகளை ஆராய்ந்து பார்த்ததில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் கடலில் கலந்த வருவதும், மேலும் 2005 ஆம் ஆண்டுக்கு பின் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதே விகிதத்தில் இது தொடரும் பட்சத்தில் 2040 ஆம் ஆண்டிற்குள் 2.6 மடங்கு அளவு பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இதற்காக சர்வதேச கொள்கைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 37

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  நாம் குப்பைகளாக கடலில் கொட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் எப்போதுமே மக்குவதில்லை. அதற்கு பதிலாக அவை மிக சிறு சிறு துகள்களாக உடைந்து கடலில் கலக்கின்றன. இவ்வாறு நடந்த பின் அவற்றை கடலில் இருந்து அகற்றுவது மிகவும் கடினமான காரியமாக போய்விடும். இதன் காரணமாகத்தான் தற்போது வரை கடலில் எந்த அளவிற்கு பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என்பதை பற்றி கண்டறிவது மிக சிக்கலான காரியமாக இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  பெருங்கடல் என்பது ஒரு சிக்கலான இடமாகும். அவற்றின் காலநிலை மற்றும் பல்வேறு காரணிகள் நம் ஆய்வுகளை மேற்கொள்வதை தடுக்கின்றன. தற்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் படி வட அட்லாண்டிக் பெருங்கடலில் தான் அதிக பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றும் மூன்று பெருங்கடல்களைப் பற்றியும் இன்னும் தெளிவாக ஆராய்ந்த பின்னரே முழுமையான தகவல்களை தெரிவிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 57

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  1980 ஆம் ஆண்டுகளில் மீன் பிடிக்கச் செல்லும் போது பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச ஒப்பந்தங்கள் அந்தந்த நாடுகளினால் இயற்றப்பட்டன. இதன்மூலம் மீன் பிடிக்க செல்லும் கப்பல்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கொட்டுவது தவிர்க்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  ஆனால் இவை சட்டமாக இயற்றப்படாமல் தன்னார்வலர்களின் விருப்பத்தை பொறுத்து அமைந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு தேவையான முடிவுகளை இந்த ஒப்பந்தம் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அதற்கேற்ற படி 2000 ஆம் ஆண்டுக்கு பின் கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்கும் விகிதமானது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 77

  பெருங்கடல்களில் மிதக்கும் 170 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள்..! 2040-க்குள் மும்மடங்கு அதிகரிக்கும் அபாயம்..

  கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதையும் கலப்பதையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வதற்கு பதிலாக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை குறைத்து அதற்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடிப்பதே இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு ஒரே வழி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES