வட கொரியாவில், பைபிள் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.அதனால் அந்த நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில், வட கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க குடிமகன் ஜெஃப்ரி ஃபோல் என்பவர் உணவகத்தின் குளியலறையில் மறந்து பைபிளை விட்டுவிட்டார். உடனே கைது செய்து ஐந்து மாதங்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
நாமெல்லாம் பள்ளி படிக்கும்போது அங்கிருக்கும் பெஞ்சில் தான் நம் கலை ஆர்வத்தை காட்டிக்கொண்டு இருப்போம். ஆனால், வடகொரியா வகுப்பில் உள்ள மேசை மற்றும் நாற்காலிகளுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிக் கட்டணத்தில் இது சேர்ந்ததாம். நல்லவேளை நம்ம ஊர் பள்ளிகளுக்கு இந்த ஐடியா இன்னும் வரல...வந்தா என்ன ஆகும்???
வடகொரியா அரசு கூடைப்பந்து விளையாட்டு விதிகளையே மாற்றியுள்ளது. பொதுவாக , ஒரு ஸ்லாம் டங்க் 2 புள்ளி மதிப்புள்ளது. ஆனால் இங்கே 3 புள்ளியும்.. விளையாட்டின் கடைசி மூன்று நிமிடங்களில் எடுக்கும் ஷாட்கள் பொதுவாக 2-புள்ளி மதிப்பு இருக்கும். அனால் வடகொரியாவில் 8 புள்ளிகளாம் . மேலும், நீங்கள் 3 ஷாட்களைத் தவறவிட்டால், ஒரு புள்ளி கழிக்கப்படும்.
கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பின் போது தூங்குவது தலைவருக்கு விசுவாசமற்றதாகக் கருதப்படுகிறது. மீறி கொஞ்சம் கண் அசந்துவிட்டால் மரணம் தான். 2015 ஆம் ஆண்டில், வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹியோன் யோங்-சோல், கிம் ஜாங்-உன் முன்னிலையில் தூங்குவது போன்ற நடத்தைக்காக 100 பேர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதுபோல சின்ன தப்பு செய்தாலும் இங்கு பெரிய தண்டனை தான் . தண்டனையும் நம் ஊரை போல 2 வருடம் அதிகபட்சம் 20 வருடம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். 3 தலைமுறைக்கு வைத்து செய்வார்களாம். சிறையில் இருந்து தப்பிக்க நினைத்தால் குடும்பத்தையே கொன்றுவிடுவார்களாம். நம் சினிமா வில்லன்கள் சொல்லும் செயலை அங்கே செய்து காட்டுகிறார்கள் போல ..
வடகொரியா செல்லும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் ஒரு வழிகாட்டி நியமிக்கப்படுகிறார், அவர் பயணம் முழுவதும் கூடவே இருப்பார். யாராவது தங்கள் குழுவை விட்டு வெளியேறினால் அல்லது உள்ளூர் ஒருவருடன் பேச முயன்றால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதனுடன், சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட இடங்களுக்கும், சில வழித்தடங்களிலும் மட்டுமே அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அதேபோல அங்குள்ள மக்கள் வெளிநாட்டு மக்களுடன் நேரடியாகவோ அல்லது போனிலோ பேசினால் கதம் கதம் தான்.