ஒற்றை கால் இல்லாமல் அவதியுற்ற கோலா கரடி.. செயற்கை கால் பொருத்தி அசத்திய மருத்துவர்கள்..
ஒற்றை கால் இல்லாமல் சிரமப்பட்டு வந்த கோலாவிற்கு ஆஸ்திரேலிய பல்மருத்துவர் செயற்கை கால் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். புதிய கால் பொறுத்தப்பட்டதை உணர்ந்த கோலா கரடி தற்போது ஓடி,ஆடி விளையாடி வருகின்றது.
Web Desk | February 23, 2021, 11:49 AM IST
1/ 6
கோலா கரடி உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை, பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் இவற்றின் தொகை குறைந்து வருகிறது. மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயினாலும் இந்த இனம் அழிந்துவருகிறது.
2/ 6
ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் இறந்தன. மரம் , செடி , கொடிகளும் தீயில் கருகி சாம்பலாயின. இதில் கோலா கரடி இனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ் இலைகளாகும். இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன.
3/ 6
இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப்பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
4/ 6
இவ்விதம் அந்நாட்டில் கோலாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வரும் நிலையில், கால்நடை மருத்துவ செவிலியர் மார்லி கிறிஸ்டியன் 2017-ஆம் ஆண்டில் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் கோலா ஒன்றை ஆபத்தில் இருந்து மீட்டு காப்பாற்றியுள்ளார்.
5/ 6
ஒற்றை கால் இல்லாமல் சிரமப்பட்டு வந்த கோலாவிற்கு தற்போது செயற்கை கால்கள் பொருத்தியுள்ளனர. விலங்கு புரோஸ்தெடிக் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு யு.எஸ். நிறுவனம் கோலாவிற்கு ஒரு பாதத்தை உருவாக்க முயன்றது, ஆனால் பல முயற்சிகளுக்குப் பிறகு அது தோல்வியடைந்தது.
6/ 6
இறுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை காலை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல் மருத்துவர் கோலாவிற்கு செயற்கை கால்களை உருவாக்கியுள்ளார். தற்போது கோலா நலமாக மரங்களில் ஏறி, ஓடி ஆடி விளையாடி வருகின்றது.