அமெரிக்கா துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா கருத்து தெரிவிக்காதது ஏன்?
ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்த கருத்தும் தெரிவிக்காது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்த கருத்தும் தெரிவிக்காது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
2/ 4
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் சூழலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
3/ 4
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவா, கமலா ஹாரிசின் அறிவிப்புக்கு இந்தியா கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.
4/ 4
மற்றொரு நாட்டின் அரசியல் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.