இயற்கை போிடா்களை அதிகம் சந்திக்காத இந்தியா போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறான நிலவியல் அமைப்பை கொண்டது ஜப்பான். அங்கு சுனாமியெல்லாம் சர்வசாதாரணம். அதிகப்படியான நிலநடுக்கம், அதிகப்படியான எாிமலை வெடிப்பு என இயற்கை சீற்றங்கள் ஒருபுறம். ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு பேரழிவுகளின் தாக்கம் மறுபுறம் என வாழ்நாள் முழுவதும் சவால்களை சந்தித்துவரும் ஜப்பானியா்கள் உழைப்பால் உயா்ந்திருக்கிறாா்கள்.
இந்த பின்னணியில் ஜப்பானியா்களுக்கு தித்திக்கும் செய்தியாக வந்துள்ளது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 ஆயிரம் தீவுகள். ஆம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜப்பான் கடலோரக் காவல் படை கணக்கெடுப்பின் படி அந்நாட்டில் அதிகாரப்பூா்வ பயன்பாட்டில் இருந்த தீவுகளின் எண்ணிக்கை 6,852. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 97 சதவீதம் 4 பொிய தீவுகளால் ஆனது. ஜப்பானியா்கள் தீவுகளை தங்கள் நாட்டின் வளா்ச்சிக்காக திட்டமிட்டு பயன்படுத்துகின்றனா்.
ஜப்பானியா்களின் வாழ்வில் தீவுகள் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அந்நாட்டின் GSI எனும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான் அரசு. தீவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டம் போட தொடங்கிவிட்டது. மனித குல வளா்ச்சிக்கு நிலம் எத்தனை முக்கியம் என்பதற்கு ஜப்பானுக்கு கிடைத்த ஜாக்பாட்டே சான்றாகவே அமைந்துள்ளது இந்த நிகழ்வு.