வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மன உளைச்சல் அதிகரித்து கோமா நிலைக்கு சென்று உள்ளதாக தென்கொரிய தூதர் சாங் சாங்க்மின் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2/ 5
36 வயதாகும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் உடல்நிலை மோசமடைந்ததாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல் பரவியது.
3/ 5
இந்நிலையில் அவர் தனது அரசு அதிகாரிங்களில் சிலவற்றை தனது சகோதரி கிம் யோ ஜோங்குக்கு அண்மையில் வழங்கினார்.
4/ 5
இந்த நிலையில் தென்கொரியாவில் உள்ள தூதர் சாங் சாங்க் மின் ஊடகங்களிடம் கிம் குறித்து பேட்டியை அளித்தார். அதில் கிம்மின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளார்.
5/ 5
மேலும் கிம்மின் சகோதரியிடம் ஆட்சி கிடைத்தால் வடகொரியாவுக்கு பெரிய ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.