

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆஃப்கானிஸ்தானில் யோகா ஆர்வலர்கள் ஒன்றுகூடி பயிற்சி மேற்கொண்டனர் (படம்: AP)


மேற்கு காபூலின் மலைப்பகுதியில் மேகங்கள் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில் பலர் ஆர்வமுடன் பங்குபெற்றனர் (படம்: AP)


முழுவதும் பெண்களாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி பயிற்சியாளர் ஃபக்ரியா மும்தாஸ் தலைமையில் நடைபெற்றது (படம்: AP)


இந்தப் பயிற்சி குறித்துப் பேசிய ஃபக்ரியா, பெண்கள் வெளியே வந்து நேரத்தை சிறந்த முறையில் செலவிட இதுவொரு நல்வாய்ப்பு என்றார் (படம்: AP)


ஆஃப்கானிஸ்தானில் யோகா பிரபல்யமடையாமல் இருந்தாலும் அதைக் கடைபிடிப்போர் அது மன அழுத்தத்தையும் சோர்வையும் நீக்குவதாக நம்புவதாக ஃபக்ரியா கூறினார் (படம்: AP)


தற்போது ஆஃப்கானிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 550ஆக உள்ளது (படம்: AP)