முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

காஷ்மீரில் கிடைத்திருக்கும் லித்தியம் இந்தியாவை உலக அரங்கில் முன்னனி நாடாக மாற்றும் சக்தியை பெற்றுள்ளது. முக்கியமாக லித்தியம் ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக மாற வாய்ப்புள்ளது

  • 17

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் உலோகம் லித்தியம். கார்பன் வெளியிடும் எரிபொருளுக்கு மாற்றாக உலகமே தற்போது மாற்று சக்தி பயன்பாட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான சக்தியாக மின்சக்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனங்களில் பயன்பத்தப்படும் பேட்டரிகள் செய்ய லித்தியம் மிக முக்கியமான மூலப்பொருள். எனவே தற்போது லித்தியம் உலகின் மிகவும் டிமாண்டான பொருளாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    வாகன பேட்டரிகள் செய்ய மட்டுமல்ல செல்போன், லேப்டாப், போன்ற மின்சாதனங்கள் தயாரிக்கவும், மருந்து, விண்கலங்களின் பாகங்கள், அலுமனிய உற்பத்தி, உரத் தயாரிப்பு மற்றும்  மருத்துவத் துறை என லித்தியத்தின் பயன்பாடு பரந்து விரிந்திருக்கிறது. தற்போதைய சூழல் படி லித்தியம் அதிகமாக கிடைக்கும் நாடுகள் பொலிவியா, அர்ஜெண்டினா மற்றும் சில. ஆனால் இங்கு கிடைக்கும் லித்தியத்தில் 70 விழுக்காடு சீனாவில் தான் சுத்திகரிக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    எனவே லித்தியத்திற்காக உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவை நம்பியிருக்கின்றன. அந்த நிலைமை இப்போது மாறப் போகிறது. இனி இந்தியா உலகின் லித்தியம் சப்ளையராக மாறப் போகிறது. ஜம்மு-காஷ்மீரின் ரியாஸ் மாவட்டத்தில் தலால்-ஹைமனா பகுதியில் கிட்டத்தட்ட 59 லட்சம் லித்தியம் பூமிக்குள் புதைந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றை வெட்டி எடுத்து பயன்படுத்தினால் இந்தியாவின் தலையெழுத்தே மாறிவிடும்.

    MORE
    GALLERIES

  • 47

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    ரியாஸ் மாவட்டத்தில் உள்ள லித்தியத்தை வெட்டியெடுப்பதில் சில சவால்கள் இருக்கின்றன. இமயமலை பள்ளத்தாக்கில் சுரங்கம் தோண்டி லித்தியத்தை வெட்டி எடுத்தால் சுற்றுச் சூழல் தொடர்பான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதோடு, தீவிரவாத சம்பவங்களால் எப்போதும் பதற்றம் நிறைந்த பூமியான காஷ்மீரில் சுரங்கம் தோண்டுவது ஆகப்பெரிய சவால். அப்படியே தோண்டி எடுத்து, அதை சுத்திகரித்து ஏற்றுமதி செய்தால் ஏராளமான லித்திய தாதுக் கழிவுகள் சேரும். எனவே உலகின் மிகப்பெரிய லித்திய தாதுக் கழிவு குப்பைத் தொட்டியாக இந்தியா மாற வாய்ப்புள்ளது. இத்தனை சாவல்களையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 57

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    மற்றவை சவால்களா இருக்கலாம், ஆனால் லித்திய தாதுக் கழிவின் குப்பைத் தொட்டியாக இந்தியா மாறிவிடும் என்பது சவால் அல்ல அது நமக்கான ரிசர்விங் சோர்ஸ் என்கிறார் மறுசுழற்சி மூலம் இந்தியாவில் லித்தியம் இயோன் பேட்டரிகளை தயாரித்து வரும் லோகும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ ராஜேத் வர்மா. லித்திய தாதுக் கழிவை குப்பை என்று சொல்வதையே நாம் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறார் வர்மா. ஏனென்றால் பூமியில் கிடைக்கும் தாதுக்களில் பல முறை மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடிகிற ஒரே தாது லித்தியம் தான் என்கிறார்.

    MORE
    GALLERIES

  • 67

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    எந்த நிலையிலும் லித்தியத்தின் கழிவு பயன்படுத்த முடியாது குப்பையாக மாறாது. முடிவே இல்லாமல் லித்தியத்தை மறுசுழற்சி செய்து கொண்டே இருக்கலாம் என்கிறார் ராஜேத் வர்மா.   ஆண்டுக்கு ஒருகோடி மின்சார கார்களை நம்மால் தயாரிக்க முடியும் என்றால், அந்த கார்களின் பேட்டரிகள் காலாவதியான பிறகு, அதில் இருக்கும் லித்தியத்தைக் கொண்டு மீண்டும் அதே அளவு பேட்டரிகளை நம்மால் தயாரிக்க முடியும் என்பது ராஜேத் வர்மாவின் நம்பிக்கை. பிறகு எப்படி இந்தியா உலகின் லித்திய தாது குப்பைத் தொட்டியாக மாற முடியும் என்கிறார் வர்மா.

    MORE
    GALLERIES

  • 77

    காஷ்மீரில் 59 லட்சம் லித்தியம் கண்டுப்பிடிப்பு..? டாப் லித்தியம் சப்ளையராக மாறுமா இந்தியா..!

    இது போன்ற தொழில்நுட்ப மற்றும் தாது வல்லுநர்களின் நம்பிக்கை வார்த்தைகளால் காஷ்மீரில் உள்ள வெள்ளைத் தங்கத்தை வெட்டி எடுக்கும் முயற்சியை இந்தியா விரைவில் முன்னெடுக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

    MORE
    GALLERIES